வெளிநாடுவாழ் இந்தியர்களும் இனி வாக்களிக்கலாம்? மத்திய அரசு வெளியிட்ட தகவல்!
மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் தேர்தல்களில் வாக்களிக்க வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு இணைய வழி தபால் வாக்கு வசதி வழங்குவது தொடர்பான தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை வெளியுறவு அமைச்சகம் பரிசீலனை செய்துள்ளது. மேலும் இது தொடர்பாக மாநிலங்களவை எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.
அதில் கடந்த ஜனவரி ஒன்றாம் தேதி நிலவரப்படி வெளிநாடுவாழ் இந்திய வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 1.15 லட்சம் தேர்தல்களின் அவர்கள் வாக்களிக்க இணையவழி தபால் வாக்கு வசதி வழங்கும் நோக்கில் தேர்தல் நடத்தை விதிகளில் திருத்தங்களை கொண்டு வரவேண்டும் என தேர்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
அந்த பரிந்துரையை நடைமுறைப்படுத்துவதில் உள்ள இடையூறுகள் சிக்கல்கள் சவால்கள் உள்ளிட்டவற்றை வெளியுறவு அமைச்சகம் ஆராய்ந்து வருகின்றது. மேலும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் நேரடியாகவோ அல்லது உறவினர்களின் மூலமாகவோ வாக்களிக்க வழி வகுக்கும் நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதித்துவ திருத்த மசோதாவுக்கு மக்களவை கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒப்புதல் வழங்கியது.
அந்த மசோதாவை மாநில அளவில் நிலுவையில் இருந்த நிலையில் 16 வது மக்களவை கலைக்கப்பட்டதன் காரணமாக அந்த மசோதாவும் காலாவதியானது என குறிப்பிட்டு கூறியுள்ளார். தற்போதைய சூழலில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படுவதில் அவர்கள் தேர்தலில் வாக்களிக்க விரும்பினால் நேரடியாக தங்கள் தொகுதிக்கு சென்று கடவுச்சீட்டை வைத்து வாக்களிக்கலாம்.
மேலும் தேர்தலில் வாக்களிப்பதற்காக பயணம் மேற்கொள்ள அவர்கள் அதிக செலவு செய்ய வேண்டியது உள்ளதால் பெரும்பாலான வாக்களிப்பதை தவிர்த்து வருவதாக தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. அவர்களுக்கு இணையவழி தபால் வாக்கு வசதியை வழங்கினால் தேர்தலில் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் எனவும் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.