உக்ரைன் மருத்துவ மாணவர்கள் இனி இங்கேயே படிக்கலாமா? தமிழக அரசின் கோரிக்கைக்கு வழிவகுக்குமா மத்திய அரசு!
ரஷ்ய மற்றும் உக்ரைன் இடையே ஒன்பது நாட்களாக தொடர் போராட்டம் நடந்து வந்தது. உக்ரைனின் வாழும் மக்கள் கலாச்சார ரீதியாக பலர் ரஷ்யா உடனே ஒன்றிணைந்து காணப்படுகின்றனர். அதுமட்டுமின்றி கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் ரஷ்ய மொழி பேசும் மக்கள் அதிக அளவில் உள்ளனர். அந்த மக்கள் ரஷ்யாவின் ஆதரவையே தேடுகின்றனர். இதனை தன்வயப்படுத்திக் கொண்ட ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்தது. அதுமட்டுமின்றி உக்ரைன் நேட்டோ அமைப்பில் சேர்வதற்கு அதிக அளவு ஆர்வம் காட்டியது.அதனை தடுப்பதற்கும் இந்தப் போர் நடைபெற்றது. நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேர்ந்தால் இதர நாடுகளின் ஆதரவைப் பெற்று ரஷ்யாவை தாக்க நேரிடும் என்பதால் தற்பொழுது போர் நடந்துதது.
தற்போது வரை 190 க்கும் மேலான மக்கள் உக்ரைனில் பலியாகியுள்ளனர். கடந்த மாதம் இறுதியிலேயே ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுப்பதற்கு உக்ரைன் எல்லையில் ஒரு லட்சத்திற்கும் மேலான ராணுவ வீரர்களை ரஷ்யா குவித்தது குறிப்பிடத்தக்கது. அதனையடுத்து வியாழன் அன்று முதல், உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா போர் தொடுக்க ஆரம்பித்துவிட்டது. அதில் குறிப்பாக ரஷ்யாவின் தலை நகரையே முதலில் தாக்கியது. அங்குள்ள மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். நமது இந்தியாவில் மருத்துவம் படிக்க இயலாத மாணவர்கள் உக்ரைன் நாட்டில் மருத்துவம் படிக்கச் செல்வது வழக்கம். அவ்வாறு சென்ற மாணவர்கள் தற்போது இந்த இரு நாடுகளின் இடையே ஏற்படும் போரில் சிக்கி தவித்து வருகின்றனர்.
அவ்வாறு படிக்கச் சென்ற மாணவர்களை மீட்கும் பணியில் அரசாங்கம் தீவிரமாக உள்ளது. இரு நாடுகளுக்கு இடையே போர் தொடங்கி ஒன்பது நாட்கள் கடந்த நிலையில் பத்தாவது நாளில் தான் ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. உக்ரைனில் உள்ள மக்களின் நலன் கருதி போர் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக ரஷ்யா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதன்படி போர் தொடுத்து பத்தவாது நாளில் காலை 6 மணி முதல் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. மேலும் மக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கு கால அவகாசம் கொடுத்து தற்காலிகமாக நிறுத்தி உள்ளதாக ரஷ்யா கூறியது. இந்த இரு நாடுகளுக்கு இடையேயான போரில் இந்தியாவை சேர்ந்த இரு மாணவர்களும் உயிரை இழக்கும் அபாயம் ஏற்பட்டு விட்டது.
தற்பொழுது போர் முடிவுற்ற நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் உக்ரைன் அதிபருக்கு அழைப்பு விடுத்து போரில் நிலையைக் குறித்து பேசியுள்ளார். உக்ரைன் அதிபர் இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் போரின் காரணமாக இந்தியா வந்த மாணவர்களை இங்கேயே படிக்க வழி வகுக்குமாறு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தற்பொழுது பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்று கோஷம் ஒரு பக்கம் இருக்கையில் தற்பொழுது இம்மாணவர்கள் இங்கேயே படிக்க வழி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு ஏற்குமா என்பது கேள்விக்குறியே. நீட் ரத்து செய்ய வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை ஏற்க வந்த பொழுது இது எந்தவிதத்தில் சாத்தியமாகும் என்பது மக்களின் பெரும் கேள்வியாக உள்ளது.