இப்படியும் வேலை கேட்கலாமா:! ரெஸ்யூம் கேக் அனுப்பி வேலை கேட்டு அசத்திய பெண்மணி!!

இப்படியும் வேலை கேட்கலாமா:! ரெஸ்யூம் கேக் அனுப்பி வேலை கேட்டு அசத்திய பெண்மணி!!

அமெரிக்காவை சார்ந்த இளம் பெண் ஒருவர்,பிரபல நிறுவனத்தில் வேலை வேண்டும் என்பதற்காக ரெஸ்யூம் கேக் அனுப்பி வைத்து வேலை கேட்ட செய்தி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

அமெரிக்கா நாட்டின் வடக்கு கரோலின் மாகாணத்தை சேர்ந்த கார்லி எனும் இளம்பெண் நைக் நிறுவனத்தில் வேலை வேண்டும் என்பதற்காக பலமுறை அவருடைய பயோடேட்டா அடங்கிய ரெஸ்யூமை அனுப்பி வைத்துள்ளார்.ஆனால்
அந்நிறுவனம் வேலைவாய்ப்பினை தரவில்லை.

இருப்பினும் அந்நிறுவனத்தில் வேலை கிடைக்க வேண்டும் என்னும் நோக்கத்தில் அப்பெண்மணி தோழியின் உதவியோடு ஒரு புதிய யுத்தியை கையாண்டு உள்ளார்.அது என்னவென்றால் தனது பயோடேட்டாவை கேக்கில் எழுதி அந்த கேக்கை அந்நிறுவனத்தில் நிகழ்ச்சி ஒன்று நடக்கும் தருணத்தில் அனுப்பி வைத்துள்ளார்.இதற்கு தற்போது யாருக்கும் வேலை வாய்ப்பினை தரஇயலாது என்று அந்நிறுவனம் பதில் அளித்துள்ளது.இப்பெண்ணிற்கு வேலை கிடைக்கவில்லை என்றாலும் இந்த பெண்ணின் விடாமுயற்சிக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

Leave a Comment