கேப்டன் விஜயகாந்த் என பரவலாக அறியப்படும் விஜயராஜ் அழகர்சாமி தான் சம்பளம் வாங்காமல் 80 படங்களில் ஹீரோவாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இனிக்கும் இளமை என்ற திரைப்படத்தின் மூலம் முதல் முதலாக தமிழ் திரையுலகில் அடி எடுத்து வைத்தவர் தான் விஜயராஜ். இவர் தமிழ் திரையுலகில் தனது பெயரை விஜயகாந்த் என மாற்றி அமைத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் விஜயகாந்த் அவர்கள் பல படங்கள் நடித்து இருந்தும் சட்டம் ஒரு இருட்டறை என்ற படத்தின் மூலமே இவருக்கு திரை துறையில் திருப்பம் ஏற்பட்டது என்றும் கூறலாம்.
கேப்டன் விஜயகாந்த் 160 படங்கள் நடித்துள்ள நிலையில், 80 படங்களுக்கு சம்பளமே இல்லாமல் நடித்துள்ளார் என்பது இன்றளவும் திரையுலகில் மிகப்பெரிய விஷயமாக பேசப்பட்டு வருகிறது.
கேப்டன் விஜயகாந்த் திரை உலகிற்கு வந்த பொழுது ஹீரோக்களுக்கான சம்பளம் என்பது லட்சங்களுக்குள் தான் இருக்கும். மேலும் ஹீரோக்களுக்கு சம்பளம் வழங்கி விட்டால் பல படங்களில் பொருளாதார நெருக்கடியும் ஏற்படுமாம். இக்காரணத்தால் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் பல படங்களில் சம்பளம் இல்லாமலேயே நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.