டிகிரி முடித்தவர்களுக்கு SEBI யில் வேலைவாய்ப்பு – அடிப்படை சம்பளமே இவ்வளவா?
இந்திய பங்கு சந்தை நிறுவனமான செபியில் உதவி மேலாளர் பதவியிடங்கள் காலியாக உள்ளன.செபி (SEBI) என்பது இந்தியாவில் பங்கு சந்தை மற்றும் நிதிச் சந்தைகளை ஒழுங்குப்படுத்தும் கட்டுப்பாட்டு அமைப்பாகும்.
இது மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றது.இந்நிலையில் இந்திய பங்கு சந்தை நிறுவனமான செபியில் புதிய வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.இந்த அறிவிப்பின் முக்கிய விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
செபி நிறுவனத்தில் மொத்தம் 24 பணியிடங்கள் காலியாக உள்ளது.உதவி மேலாளர் பிரிவில் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பதவிகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் பிஇ அல்லது முதுகலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பத்தாரர்கள் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி மற்றும் ஓபிசி பிரிவினருக்கு அரசு விதிகளின் படி வயது தளர்வு உண்டு. வயதானது 2022 ஜூன் மாதம் 30ம் தேதியின் அடிப்படையில் கணக்கிடப்படும். அடிப்படை சம்பளமாக ரூ.44,500 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
விண்ணப்பத்தாரர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள். முதல்நிலை எழுத்து தேர்வு ஆகஸ்ட் 27 ம் தேதியும் 2ம் நிலை எழுத்து தேர்வு செப்டம்பர் 24ம் தேதியும் நடைபெறும். விருப்பம் உள்ளவர்கள் www.sebi.gov.in இணையதளத்தின் மூலம் விண்ணப்பம் செய்ய செய்யலாம்.
விண்ணப்பிக்கும் கடைசி நாள் 31.07.2021.
விண்ணப்ப கட்டணமாக ரூ.1000 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, பிடபிள்யூபிடி பிரிவினருக்க ரூ.100 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பம் செய்ய விரும்புவோர் www.sebi.gov.in இணையதளம் சென்று Careers என்பதை கிளிக் செய்து SEBI Assistant Manager தொடர்பான அறிவிப்பை கிளிக் செய்து பதிவு செய்ய வேண்டும். விரைவில் முந்திடுங்கள் உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறது வேலை.