சருமத்தில் உள்ள தேவையற்ற முடிகளை அகற்ற கண்ட க்ரீம் பயன்படுத்தி வருபவர்கள் அதை இப்பொழுதே நிறுத்துங்கள்.கெமிக்கல் நிறைந்த க்ரீம்ஸ் சரும அழற்சி,தோல் அரிப்பு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது.
ஆகவே சருமத்தில் உள்ள முடிகளை அகற்ற கற்றாழை வேக்ஸ் பயன்படுத்துங்கள்.இது சருமத்திற்கு ஒருவித பொலிவை தரும்.கற்றாழை ஜெல்,வெள்ளை சர்க்கரை மற்றும் எலுமிச்சை சாறு ஆகிய 3 பொருட்களை வைத்து எளிய முறையில் வேக்ஸ் தயாரிப்பது குறித்து விவரிக்கப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள்:
1)கற்றாழை மடல் – ஒன்று
2)சர்க்கரை – ஒரு ஸ்பூன்
3)எலுமிச்சை சாறு – இரண்டு ஸ்பூன்
செய்முறை விளக்கம்:
*முதலில் கற்றாழை மடல் ஒன்றை தோல் நீக்கிவிட்டு ஜெல்லை மட்டும் சேகரித்துக் கொள்ள வேண்டும்.
*பிறகு பாத்திரம் ஒன்றை எடுத்து ஒரு தேக்கரண்டி வெள்ளை சர்க்கரை சேர்த்துக் கொள்ள வேண்டும் .
*அடுத்து ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி அதன் ஜாரை சர்க்கரையில் பிழிந்துவிட வேண்டும்.
*பிறகு இதை அடுப்பில் வைத்து மிதமான தீயில் சூடுபடுத்த வேண்டும்.அடுத்து எடுத்து வைத்துள்ள கற்றாழை ஜெல்லை அதில் போட்டு கரண்டி பயன்படுத்தி கலந்துவிட வேண்டும்.
*வேக்ஸ் ஜெல் பதத்திற்கு வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு இதை சிறிது நேரம் ஆறவிட வேண்டும்.
*பிறகு நீங்கள் வேக்ஸ் பயன்படுத்தும் இடத்தில் டால்கம் பவுடர் கொட்டி தயாரித்து வைத்துள்ள வேக்ஸ் ஜெல்லை அப்ளை செய்ய வேண்டும்.
*பிறகு அதன் மீது ஸ்ட்ரிப் ஓட்டி 10 நிமிடங்களுக்கு உலரவிட வேண்டும்.பிறகு ஸ்ட்ரிப்பை அகற்றிவிட்டு தண்ணீர் கொண்டு அவ்விடத்தை சுத்தம் செய்ய வேண்டும்.வாரம் ஒருமுறை இந்த கற்றாழை வேக்ஸ் பயன்படுத்தி வந்தால் சரும முடிகள் வேரோடு நீங்கிவிடும்.