கனரா வங்கி அறிமுகப்படுத்தியிருக்கும் அருமையான திட்டம்! மிஸ் பண்ணிடாதீங்க!

0
146

நாட்டிலுள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் 3வது பெரிய நிறுவனமாக திகழ்ந்து வரும் கனரா வங்கி சிறப்பு பிக்சட் டெபாசிட் திட்டம் ஒன்றை அறிமுகம் செய்திருக்கிறது. இந்தத் திட்டமானது பொதுமக்கள் மற்றும் மூத்த குடிமக்கள் உள்ளிட்ட இரு சாராருக்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

ரெப்போ ரேட் விகிதத்தை ரிசர்வ் வங்கி அதிகரித்த நிலையில், மற்றொரு பொதுத்துறை நிறுவனமான பேங்க் ஆப் பரோடா வங்கி தனது சிறப்பு பிக்ஸட் டெபாசிட் திட்டத்தை அறிமுகம் செய்தது. தற்போது கனரா வங்கியும் அதே போல திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது. 2 கோடிக்கும் குறைவான அளவில் டெபாசிட் செய்ய விரும்புபவர்களுக்கு இந்த திட்டம் பொருந்தும் என்று கனரா வங்கி தெரிவித்துள்ளது.

செப் 30 வரையில் இந்தத் திட்டத்தில் இணையலாம்

கனரா வங்கியின் சிறப்பு பிக்சட் டெபாசிட் திட்டத்தில் இணைவதற்காக வாடிக்கையாளர்களுக்கு செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் முதலீடு காலம் 333 நாட்களாகும். பொதுமக்களுக்கு 5.10 சதவீத வட்டியும், மூத்த குடிமக்களுக்கு 5.60 சதவீத வட்டியும், வழங்கப்படுகிறது.

ஜூன் 23ஆம் தேதி முதல் அமலில் உள்ள வட்டி விகிதம்.

கனரா வங்கியில் 2 கோடிக்கும் குறைவான ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதம் கடந்த 23-ஆம் தேதி முதல் மாற்றியமைக்கப்பட்டுள்ளது அதன் விவரங்களை கீழே காணலாம்.

7 நாட்கள் முதல் 45 நாட்கள் வரை: பொதுமக்கள் 2.90% மூத்த குடிமக்கள் 2.90%

46 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை: பொதுமக்கள் 4% மூத்த குடிமக்கள் 4%

91 நாட்கள் முதல் 179 நாட்கள் வரை: பொதுமக்கள் 4.05 சதவீதம் மூத்த குடிமகன் 4.05 சதவீதம்

180 நாட்கள் முதல் 269 நாட்கள் வரை: பொதுமக்கள் 4.50% மூத்த குடிமக்கள் 5%

270 நாட்கள் முதல் 1 வருடத்திற்கு குறைவாக: பொதுமக்கள் 4.55% மூத்த குடிமக்கள் 5.05% சதவீதம்

333 நாட்கள் சிறப்பு திட்டம் பொதுமக்கள் 5.10% மூத்த குடிமக்கள் 5 புள்ளி 60%

1 வருடத்திற்கு மட்டும்: பொதுமக்கள் 5.30% மூத்த குடிமக்கள் 5.80%

1 வருடத்திற்கு மேல் 2 வருடத்திற்குள்: பொதுமக்கள் 5.40% மூத்த குடிமக்கள் 5.90%

2 வருடங்களுக்கு மேல் 3 வருடங்களுக்குள்:பொதுமக்கள் 4.45% மூத்த குடிமக்கள் 5.95%

3 வருடங்களுக்கு மேல் 5 வருடங்களுக்குள்: பொதுமக்கள் 5.70% மூத்த குடிமக்கள் 6.20%

5 வருடங்களுக்கு மேல் 10 வருடங்கள் வரை: பொதுமக்கள் 5.75% மூத்த குடிமக்கள் 6.25%

ரிசர்வ் வங்கி தன்னுடைய ரெப்போ வட்டி விகிதத்தை அதிகரித்ததை தொடர்ந்து பல்வேறு வங்கிகளும் தங்களுடைய பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கான வட்டி விகிதத்தை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Previous articleஅம்ரிதா பல்கலைக்கழகத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்! இளைஞர்களே உடனே முந்துங்கள்!
Next articleபரபரப்பான சூழ்நிலையில் இன்று நடக்கிறது அதிமுகவின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்! எடுக்கப்போகும் முடிவு என்ன?