உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில், இன்னொரு பக்கம் ஒமைக்ரான் தொற்று உலகம் முழுவதும் பரவி வருகிறது.
இப்படியான சூழ்நிலையில், புத்தாண்டு,கிறிஸ்துமஸ் உள்ளிட்ட கொண்டாட்டத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் மக்கள் விடுமுறைக்கு திட்டமிட்டு வருகின்ற சூழ்நிலையில், அவற்றை ரத்து செய்து விடுமாறு உலக சுகாதார அமைப்பின் தலைவர் கேட்டுக்கொண்டிருக்கிறார். இதனை முன்னிட்டு சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் நிருபர்களிடம் அவர் உரையாற்றி இருக்கிறார்.
அப்போது அவர் பேசியதாவது, வாழ்க்கையே ரத்தாகி விடுவதை விட ஒரு நிகழ்வு ரத்து செய்யப்படுவது மிகச்சிறந்தது. தற்சமயம் கொண்டாடி விட்டு அதன்பிறகு வருத்தப்படுவதை விட தற்சமயம் கிறிஸ்மஸ் ,புத்தாண்டு கொண்டாட்டங்களை ரத்து செய்து விட்டு அதன் பிறகு கொண்டாடலாம் வருகின்ற புத்தாண்டில் நோய்த்தொற்றை முடிவுக்கு கொண்டு வருவோம் என்று தெரிவித்தார்.
டெல்டாவை விட ஒமைக்ரான் குறிப்பிடத்தக்க அளவில் கணிசமாக பரவி வருகிறது என்பதற்கு சான்றுகள் இருக்கின்றன. தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மற்றும் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் மறுபடியும் நோய் தொற்றுக்கு ஆளாகலாம் என்றும், அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.