இனி ஆர்டர்லி முறை ரத்து! தமிழக அரசு மற்றும் டிஜிபிக்கு ஐ கோர்ட்டின் அதிரடி உத்தரவு!
ஆர்டர்லி முறை என்பது ஆங்கிலேயர் காலத்தில் இருந்தே இருந்து வருகிறது. இது முதலில் மருத்துவத் துறையில் செயல்பட்டு வந்த நிலையில், நாளடைவில் காவல்துறைக்கும் இந்த ஆர்டர்லி முறை அமல்படுத்தப்பட்டது. உயர் அதிகாரிகளுக்கு வேலை நேரத்தில் உதவியாக இருப்பதே இந்த ஆர்டர்லி முறையாகும். ஆனால் உயர் அதிகாரிகள் அவ்வாறு இருக்கும் ஆர்டர்லிகளை தங்களது சொந்த வேலைக்காகவும் பயன்படுத்தி வருகின்றனர்.
அவர்களது பிள்ளைகளை பள்ளிக்கு அழைத்து செல்வது, வீட்டு வேலைகள் செய்வது, செல்லப்பிராணிகள் ஏதேனும் இருந்தால் அவற்றை பராமரிப்பது என ஆர்டர்லிகளை பயன்படுத்தி வருவதாக புகார்கள் வந்தது.
இத்தோடு காவல்துறை வட்டாரத்தில் ஆர்டர்லிகள் என்றாலே எடுப்பு வேலை செய்பவர்கள் தான் என கேலி செய்வதும் உண்டு. இதையெல்லாம் மாற்ற ஆர்டர்லி முறையை முழுவதுமாக ஒழிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் தமிழக அரசு மற்றும் டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளது.
எந்த பணிக்காக அவர்கள் நியமிக்கப்பட்டார்களோ அந்த பணியை மட்டும் வழங்க வேண்டும் என தெரிவித்து. நான்கு மாதங்களுக்குள் ஆர்டர்லி முறையை முழுவதுமாக ஒழிக்க வேணும் என கூறியுள்ளது.உயர் அதிகாரிகளுக்கு அலுவலகத்தில் உதவி புரிய அலுவலகப் பணியாளர்கள் என்ற அடிப்படையில் ஆட்களை சேர்த்துக் கொள்ளலாம் என உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.