100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து.. தமிழக அரசு வெளியிடப் போகும் திடீர் அறிவிப்பு!!

0
899
Cancellation of 100 units of free electricity.. Tamil Nadu government is going to issue a sudden announcement!!
Cancellation of 100 units of free electricity.. Tamil Nadu government is going to issue a sudden announcement!!

TNEB: அரசு ஊழியர்கள் எனத் தொடங்கி வசதி படைத்தவர்களுக்கு இலவச மின்சாரத்தை ரத்து செய்யக் கோரி தமிழக அரசு ஆலோசனை செய்து வருகிறது.

தமிழக அரசானது 100 யூனிட் மின்சாரம் வரை இலவசமாகவும், 500 யூனிட் மின்சாரத்தை மானிய விலையிலும் கொடுத்து வருகின்றது. மேலும், விவசாயம் குடிசை ஆகியவற்றில் வசிப்போருக்கு முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. விசைத்தறி கைத்தறி தொழில் முனைவோர்களுக்கும் இலவசமாகவும் மற்றும் வசதியை பொறுத்து மானிய விலையிலும் கட்டணம் நிர்ணயித்து வருகின்றது. இந்த இலவச மின்சாரத்திற்காக தமிழக அரசு ஆண்டுதோறும் செலவிடும் பணத்தின் மதிப்பானது தொடர்ந்து அதிகரித்த வண்ணமாகவே உள்ளது.

அந்தவகையில் கடந்த 2015 ஆம் ஆண்டில் 7700 கோடிக்கு மேல் மானியத் தொகை அதிகரித்திருந்தது. மேலும் அன்றைய அரசு அனைத்து மக்களுக்கும் இலவச மின்சாரத்தை அறிவித்ததனால் 2016 ஆம் ஆண்டு மட்டும் 10,484 கோடியாக உயர்ந்தது. மேலும் இலவச மின்சாரத்திற்கான மானிய தொகையானது வருடம்தோறும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது.

இதனால் தற்போது உள்ள தமிழக அரசு இதனைக் குறைக்கும் விதமாக பல்வேறு கட்ட கலந்த ஆலோசனைகளை நடத்தி வருகிறது. அதனடிப்படையில் வசதி இருப்பவர்களுக்கு இலவச மின்சாரம் ஏன்? என பலர் அதில் கேள்வி எழுப்பியுள்ளனர். எனவே, ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இந்த இலவச மின்சாரம் வழங்குவதை குறித்து மறுபரிசீலனை செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. இது வரவேற்கப்பட்ட திட்டம் என பலரும் கூறி வருகின்றனர். இதனால் தமிழக அரசுக்கு வருடம்தோறும் அதிகரித்து வரும் மின்சாரத்திற்கான மானிய தொகையானது குறையக் கூடும்.

Previous articleஎடப்பாடிக்கு கொடுக்கும் பிரஷர்!! அதிமுக வை ரவுண்டு கட்டிய பாஜக.. இனி தப்பிக்க வாய்ப்பே இல்லை!!
Next articleஒரு பக்கம் கீர்த்தி சுரேஷ் மறுபக்கம் திரிஷா.. இது தான் விஜய்யின் சுயரூபம்!! உண்மையை உடைத்த நிரூபர்!!