விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் ரத்து! கே பாலகிருஷ்ணன் எச்சரிக்கை!!
மின்சார சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டால் விவசாயிகளுக்கான இலவசம் மின்சாரம் பறிபோகும்சூழல் ஏற்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த மூன்று நாட்களாக திருவண்ணாமலையை அடுத்த வேங்கிக்காலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழுகூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பங்கேற்ற மார்க்சிலிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சின்ன் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதவாறு.
மின்சார சட்ட திருத்த மசோதா – 2022 கொண்டுவரப்பட்டடு தனியாரிடம் சென்றால் தமிழக மக்களின் உரிமைகள் பறிக்கப்படும் என்றும் விவசாயிகளுக்காக வழங்கப்படும் இலவசம் மின்சாரம் ரத்து செய்யப்படும் என்றும் கூறினார்.இலவச மின்சாரத்தை ரத்து செய்வதற்கான பணியை தொடங்குவதற்கு மின்சார எண்னைய் ஆதார் எண்ணுடன் இணைக்க வலியுறுத்துகின்றனர்.
இது மட்டுமின்றி மின்சார வாரியம் தனியார் மையமாக்கப்பட்டால்,தனியாரின் விருப்பப்படி கட்டணத்தை உயர்த்தும் அவலம் ஏற்படும்.இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால் தமிழகத்தில் கொந்தளிப்பு ஏற்படும்.மேலும் தமிழக அரசு செய்த நல்ல செயல்கள் மறைத்து,மின்சார கட்டணம் மற்றும் பால் விலை உயர்வு போன்ற செயல்கள் மக்களிடையே முகச்சுழிப்பை ஏற்படுத்தும் என்று அவர் தெரிவித்தார்.இதுதொடர்பாக முதல்வரை சந்தித்து மக்களின் மீது ஏற்றபடும் சுமையை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்துவோம் என்றும் அவர் கூறினார்.