பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கும் இட ஒதுக்கீடு – களத்தில் நானே இறங்குவேன்! அரசை எச்சரித்த பாமக நிறுவனர்!    

0
151

பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கும் இட ஒதுக்கீடு – களத்தில் நானே இறங்குவேன்! அரசை எச்சரித்த பாமக நிறுவனர்!

புதுச்சேரி அரசு தற்போது அரசு துறைகளில் காலி பணியிடங்கள் குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் காவல் தீயணைப்பு என தொடங்கி கிட்டத்தட்ட 1500 பணியிடங்கள் நிரப்ப போவதாக கூறியுள்ளனர். ஆனால் இந்த காலி பணியிடங்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் என்று இட ஒதுக்கீடு ஏதும் வணங்குவது குறித்து அறிவிப்பு ஏதும் வெளியிடவில்லை. இதனை எதிர்த்து அங்குள்ள பாமக போராட்டம் நடத்துவதாக தெரிவித்திருந்தது. அந்த வகையில் சட்டசபை நோக்கி பாமகவினர் பேரணியாக சென்றனர்.

இவர்கள் செல்லும் பாதி வழியிலேயே போலீசார் தடுப்பணைகள் வைத்து அவர்களை தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் பாமகவினர் அதனை எதிர்த்து சென்று விட்டனர். பின்பு முதல்வர் ரங்கசாமியை சந்தித்து பின்பு இட ஒதுக்கீடு குறித்து மனு அளித்தனர். இவ்வாறு புதுச்சேரி அரசு பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்காத குறித்து பாமக நிறுவனர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில்,

புதுவை அரசின் ஏ, பி பிரிவு பணிகளில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு மறுக்கப்படுவது பெரும் சமூக அநீதி. இது தொடர்பான புதுவை மக்களின் உணர்வை பாட்டாளி மக்கள் கட்சி அறவழிப் போராட்டத்தின் மூலம் அரசுக்கு உணர்த்தியிருக்கிறது.

புதுவை மக்களின் உணர்வுகளை அம்மாநில அரசு உணர வேண்டும்; மதிக்க வேண்டும். புதுவையில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அனைத்து நிலைகளிலும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தான் முழுமையான சமூகநீதி. வாக்களித்த மக்களை ஏமாற்ற நினைக்கக் கூடாது.

பாட்டாளி மக்கள் கட்சியின் சமூக நீதிக்கான போராட்டம் தொடக்கமாக இருக்க வேண்டுமா…. நிறைவாக இருக்க வேண்டுமா? என்பதை புதுவை அரசு தான் முடிவு செய்ய வேண்டும். அனைத்து நிலைகளிலும் எம்.பி.சி இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய அரசு தவறினால் நானே களமிறங்கி போராடுவேன்.

பிற்படுத்தப்பட்டோருக்கு அளிக்கப்பட வேண்டிய இட ஒதுக்கீடு முறையாக வழங்க வேண்டும்.இல்லையென்றால் அவர்களின் நீதிக்காக நானே களத்தில் இறங்க தயாராக உள்ளதாக பாமக நிறுவனர் தெரிவித்துள்ளார்.