இந்த 35 ரயில்களின் சேவை ரத்து! எந்தெந்த ஊர்களில் தெரியுமா?
எந்தெந்த அக்னிபத் வீரர்களுக்கு பயிற்சி காலம் முடிந்ததும்.4 ஆண்டுகளுக்கு பணிபுரியலாம்.அப்போது அவர்கள் நிரந்தர வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.அதில் 25 சதவித வீரர்கள் மட்டுமே பணி அமர்தப்படுவார்கள்.மீதமுள்ள 75 சதவித வீரர்கள் பிடிப்பு பணம் கொடுத்து திருப்பி அனுப்படுவார்கள்.
அவர்கள் முப்படைகளில் மீண்டும் சேர முடியாது. நடப்பாண்டில் 46,000 அக்னி வீரர்கள் தேர்வு செய்யப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 90 நாட்களில் புதிய திட்டத்தில் ஆள் சேர்ப்பு தொடங்கப்படும்.
2023ஆண்டு ஜூலையில் அக்னி வீரர்களின் முதல் அணி தயாராகிவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.ராணுவ வீரர்களின் வயது வரம்பு உயர்த்தப்பட்டதற்கு பீகாரில் அக்னிபத் திட்டதின் மூலம் வேலைவாய்ப்பை பெறுவதற்காக கடந்த இரண்டு நாட்களாக போராடி வருகிறார்கள்.
அதனை தொடர்ந்து முன்றாம் நாளான இன்று நாடு முழுவதும் 200 ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன 35 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்து. இந்தப் போராட்டமானது தென்னிந்தியாவுக்கும் பரவியுள்ளது.
தெலுங்கானாவில் இந்த போராட்டம் வெடித்துள்ளது. இதனை அடுத்து நாடு முழுவதும் அக்னிபாத் எதிர்ப்பு போராட்டத்தால் 200 ரயில் சேவைகள் பாதிப்பு . மேலும் 35 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மற்றும் வடக்கு ரயில்வே நிர்வாகமானது ஹவுரா- புதுடெல்லி பூர்வா எக்ஸ்பிரஸ் ஹவுரா- லால்குவான் எக்ஸ்பிரஸ் ராஞ்சி-பாட்னா பாடலிபுத்ரா எக்ஸ்பிரஸ் தனாபூர்- டாடா எக்ஸ்பிரஸ் ஹவுராவ்- தன்பாத் பிளாக் டைமண்ட் எக்ஸ்பிரஸ் அசன்சோல் டாடா எக்ஸ்பிரஸ் ஜெயநகர்- ஹவுரா எக்ஸ்பிரஸ் மால்டா டவுன் – கியூல் எக்ஸ்பிரஸ் ரயில்களை ரத்து செய்துள்ளது. தெலுங்கானாவில் போலிசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் பலர் படுகாயம் அடைந்தனர் அதில் ஒருவர் பலி.