
Magalir Urimai Thogai Scheme: ஒவ்வொரு மாநிலத்திலும் பெண்களின் நலத்தையொட்டி பல்வேறு நலத்திட்டங்கள் அமல்படுத்தியுள்ளனர். தமிழகத்தில் கூட மகளிர் உரிமைத் தொகை ரூ 1000 வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல மகாராஷ்டிராவிலும் மாதந்தோறும் பெண்களுக்கு 1500 வழங்கப்பட்டு வரும் வகையில் இதனை முறையற்ற நிலையில் ஆண்களும் பெற்று வருவது அம்பலமாகியுள்ளது. இதரீதியாக அம் மாநில அரசு தரவுகளை சரிபார்த்த போது இதனை கண்டுபிடித்துள்ளனர்.
அதுமட்டுமின்றி மற்ற மாநிலங்களில் உள்ளதைப் போல இந்த மாநிலத்திலும் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறும் பெண்கள் வேறு திட்டத்தில் பயன்பெறக் கூடாது. அதேபோல குடும்பத்தில் இந்த திட்டத்தின்படி ஒருவர் மட்டுமே பயன்பெறவும் முடியும். ஆனால் தற்போது இருபது லட்சத்திற்கும் மேற்பட்டோர் முறையற்ற நிலையில் பயன்பெற்று வருகின்றனர். அதாவது வேறொரு திட்டத்தில் பணம் பெற்றுக்கொண்டு இந்த மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழும் பயன்பெறுகின்றனர்.
அவ்வாறு கிட்டத்தட்ட 26.34 லட்சம் பேர் மோசடி செய்துள்ளனர். தற்போது அம் மாநில அரசு இந்த திட்டத்திலிருந்து 26.34 பேரை நீக்கியுள்ளது. மேற்கொண்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்டோர் ஆலோசனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளனர்.