கடகம் ராசி- இன்றைய ராசிபலன்! மகிழ்ச்சிகள் அதிகரிக்கும் நாள்!

0
209
Cancer Sign – Today's Horoscope!! A day of increasing excellence!
Cancer Sign – Today's Horoscope!! A day of increasing excellence!

கடகம் ராசி- இன்றைய ராசிபலன்! மகிழ்ச்சிகள் அதிகரிக்கும் நாள்!

கடக ராசி அன்பர்களே ராசி அதிபதி சந்திர பகவான்.

இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். சந்திர பகவான் ஏழாம் இடமாகிய களத்திர ஸ்தானத்தில் இருப்பதால் சந்தோஷமாக காணப்படுவீர்கள். குடும்ப உறவு சுபிட்சமாக இருக்கும். கணவன் மனைவியிடையே அதி அற்புதமான அன்யூனியம் நிலவும்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைப்பதற்கு உண்டான வாய்ப்புகள் அதிகமாகும். தொழில் மற்றும் வியாபாரம் அருமையாக நடைபெறும். சிலருக்கு கேட்டிருந்த உதவிகள் இன்று கைக்கு வந்து சேரும்.

அரசியலில் இருக்கும் நண்பர்கள் முன்னேற்றம் அடைவார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வருமான வாய்ப்புகள் உறுதியாகும். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு சந்தோஷமான செய்தி ஒன்று வந்து சேரும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் கணவனின் அன்பை பெற்று மகிழ்வார்கள். உடல் ஆரோக்கியம் சீராகிய ஆனந்தப்படுத்தும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் சந்தோஷமான சூழ்நிலை நிலவும். மூத்த வயதை சேர்ந்த அன்பர்கள் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் கலந்து ஆலோசித்து அருமையான வாய்ப்புகளை பெறுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு எடுக்கும் முயற்சிகள் காலதாமதம் ஆகும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ஊதா நிற ஆடை அணிந்து ஸ்ரீதேவி கருமாரி அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleமிதுனம் ராசி- இன்றைய ராசிபலன்! குழப்பங்கள் அதிகரிக்கும் நாள்!
Next articleமரு இருக்கின்றது என்று கவலையா! ஒரே வாரத்தில் குணமாக சூப்பர் டிப்ஸ்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here