கடகம் ராசி – இன்றைய ராசிபலன் !! பயண வாய்ப்புகள் மேம்படும் நாள்!

0
281
Cancer Sign – Today's Horoscope!! A day of increasing excellence!
Cancer Sign – Today's Horoscope!! A day of increasing excellence!

கடகம் ராசிஇன்றைய ராசிபலன் !! பயண வாய்ப்புகள் மேம்படும் நாள்!

கடக ராசி அன்பர்களே ராசி அதிபதி சந்திர பகவான்.இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு பயண வாய்ப்புகள் மேம்படும் நாள். குடும்ப உறவு சுபிட்சமாக உள்ளது. கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை சிறப்பாக உள்ளது.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். உத்தியோகத்தில் பணியிட மாறுதல் சிலருக்கு உறுதி ஆகும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக சில பயண வாய்ப்புகள் மேம்படும்.

அரசியலில் இருக்கும் அன்பர்கள் பயணங்கள் மேற்கொள்வதால் மக்களின் செல்வாக்கு அதிகரிக்க பெறுவார்கள். கலைத்துறையை சேர்ந்த அன்பர்கள் வெளியூர் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வார்கள்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு எடுக்கும் முயற்சிகள் காலதாமதம் ஆகும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் உற்றார் உறவினர்கள் வருகையால் இல்லம் களைகட்டி இருப்பதைக் கண்டு மனமகிழ்ந்து போவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்வது நல்லது.

மாணவ மாணவிகள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். மூத்த வயதை சேர்ந்த அன்பர்கள் எடுக்கும் முயற்சிகள் இழுபறி ஆகிறதே என்ற கவலையோடு காணப்படுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு பயண வாய்ப்புகள் மேம்படும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ஊதா நிறம் ஆடை அணிந்து ஸ்ரீதேவி கருமாரியம்மன் வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleமிதுனம் ராசி- இன்றைய ராசிபலன் !! குழந்தைகள் மூலம் நன்மைகள் உண்டாகும் நாள்!
Next articleவந்தாச்சு குளிர்காலம்! பனி கால பராமரிப்பு முறைகள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here