கடகம் ராசி-இன்றைய ராசிபலன்!! பொருளாதார நிலை உயரும் நாள்!!

0
232
Cancer Sign – Today's Horoscope!! A day of increasing excellence!
Cancer Sign – Today's Horoscope!! A day of increasing excellence!

கடகம் ராசி-இன்றைய ராசிபலன்!! பொருளாதார நிலை உயரும் நாள்!!

கடக ராசி அன்பர்களே ராசி அதிபதி சந்திர பகவான்.

இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு பொருளாதார நிலை உயரும் நாள். சந்திர பகவான் தனவாக்கு குடும்பஸ்தானத்தில் இருப்பதால் எதிர்பாராத வருமானம் வந்து சேரும். கணவன் மனைவி ஒற்றுமை இன்று அதி அற்புதமான அன்யூனியம் நிலவும். குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள்.

உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் சலுகைகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தை அபிவிருத்தி செய்யும் எண்ணம் மேலோங்கும். கடுக்கல் வாங்கல் மிகச்சிறப்பான பாதையில் செல்வதால் புதிய முதலீடுகளை புகுத்தி முன்னேறுவீர்கள்.

உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு வருமானம் வந்து சேரலாம். குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்கள் கணவனை அன்பை பெற்று மகிழ்வார்கள். நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகளின் மூலம் சில நன்மைகளை இன்றைய தினம் நீங்கள் எதிர்பார்க்கலாம்.

அரசியல்வாதிகள் முக்கிய பிரபலங்களாக மாறுவார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வருமான வாய்ப்புகள் உறுதியாகும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக காணப்படுவார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான மஞ்சள் நிற ஆடை அணிந்து குரு தட்சிணாமூர்த்தி சுவாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleமிதுனம் ராசி-இன்றைய ராசிபலன்!! உடன் பிறந்தவர்களின் உதவிகள் கிடைக்கும் நாள்!!
Next articleசிம்மம் ராசி-இன்றைய ராசிபலன்!! மனதில் குழப்பங்கள் அதிகரிக்கும் நாள்!!