கடகம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு ஆற்றலும் சந்தோஷமும் அதிகரிக்கும் நாள்!!

Photo of author

By Selvarani

கடகம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு ஆற்றலும் சந்தோஷமும் அதிகரிக்கும் நாள்!!

கடக ராசி அன்பர்களே ராசி அதிபதி சந்திர பகவான். இன்னைக்கு இந்த நாள் உங்களுக்கு ஆற்றலும் சந்தோஷமும் அதிகரிக்கும் நாள். காலையில் சந்திர பகவான் பகை உணர்வு ஸ்தானத்தில் இருப்பதால் எந்த ஒரு வேலையும் ஆற்றலுடன் செய்து முடிப்பீர்கள். மாலைக்கு பிறகு களஸ்திர ஸ்தானத்திற்கு வந்தால் சந்தோஷம் கிடைக்கும். நிதி அனுகூலமாக இருக்கும். கணவன் மனைவி அனுசரித்து செல்வது நல்லது. குடும்ப உறுப்பினர்கள் உங்கள் மீது பாச மழை பொழிவார்கள்.

உத்தியோகத்தில் வேலைகள் அருமையாக நடைபெறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் எதிர்பாராத முன்னேற்றம் வந்து சேரும். கொடுக்கல் வாங்கல்கள் அது அற்புதமான பாதையில் செல்லும்.

உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு அலுவலகத்தில் தனி மரியாதை கிடைக்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் சந்தோஷமான சூழ்நிலைகளை காண்பார்கள். நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகளின் வகையில் நன்மைகள் வந்து சேரும்.

அரசியல்வாதிகள் முக்கிய பிரபலங்களாக மாறுவார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு மாற்று மருத்துவத்தை நாடுவார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சாம்பல் நிற ஆடை அணிந்து ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.