கடகம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பயணமும் குழப்பமும் உண்டாகும் நாள்!!

0
142
#image_title

கடகம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பயணமும் குழப்பமும் உண்டாகும் நாள்!!

கடக ராசி அன்பர்களே ராசி அதிபதி சந்திர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு காலையில் பயணமும் மாலையில் குழப்பமும் உண்டாகும் நாள். காலையில் வெளியூர் அல்லது உள்ளூர் பயண வாய்ப்புகள் வருவதால் அதன் மூலம் மாலையில் குழப்பங்கள் உண்டாக்கலாம். கணவன் மனைவி இடையே ஓரளவிற்கு அனுகூலமான சூழ்நிலை அமையும். குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு அனுகூலமாக செயல்படுவார்கள்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரும். உத்தியோகத்தில் பணியிட மாறுதல் சிலருக்கு உறுதியாகும். தொழில் வியாபார நித்தமாக பயண வாய்ப்புகள் மேம்படும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் பயணங்கள் மேற்கொள்வார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்கள் வாய்ப்புகள் கிடைத்த மகிழ்வார்கள்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு வாகனம் வாங்கும் யோகம் உண்டாகலாம். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் குதூகலமாக காணப்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்ளுங்கள்.

மாணவ மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். மூத்த வயதை சேர்ந்த அன்பர்கள் உடல் ஆரோக்கியத்திற்காக சில முக்கிய முன்னேற்பாடுகளை செய்வார்கள். வெளிநாட்டில் வசிக்கும் அன்பர்களுக்கு பயணங்கள் உண்டாக்கலாம்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சிவப்பு நிற ஆடை அணிந்து எம்பெருமான் முருகப்பெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

author avatar
Selvarani