கடகம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு ஆற்றல் மிக்கவர்களின் உதவி கிடைத்து மகிழும் நாள்!!
கடக ராசி அன்பர்களே ராசி அதிபதி சந்திர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு சுபஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் ஆற்றல் மிக்கவர்களின் உதவி கிடைத்து மகிழும் நாள். குடும்ப உறவு மற்றும் கணவன் மனைவியை சிறுசிறு பிரச்சனைகள் வரலாம் என்பதால் விட்டுக் கொடுத்து செல்வது மிகவும் நல்லது.
வருமானம் ஓர் அதற்கு உயர்ந்த வரும். உத்தியோகத்தில் சிலருக்கு பணியிடமாறுதல் உறுதியாகும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக வெளியூர் பயணம் அல்லது வெளிநாட்டு பயணங்கள் உண்டாகும். அதன் மூலம் உங்களுக்கு புணர்ச்சி தரும் சம்பவம் ஒன்று நடைபெறும்.
அரசியலில் இருக்கும் நண்பர்கள் பயணங்களை மேற்கொள்வார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் உறுதியாகும். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் ஒருவித குழப்பம் அச்சம் குடிகொள்ளும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் உற்றார் உறவினர்கள் மூலம் சில நன்மைகளை பெறுவார்கள். சிலருக்கு பொன் பொருள் ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உடல் ஆரோக்கியம் சீராகவும் சிறப்பாகவும் காணப்படும்.
மாணவ மாணவிகள் கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலைகளை காண்பார்கள். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு மாற்று மருத்துவத்தை நாடுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு சந்தோஷமான செய்திகள் வந்து சேரும்.
இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ஊதா நிறம் ஆடை அணிந்து ஸ்ரீதேவி கருமாரி அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.