வீட்டு வேலை செய்யும் பெண்ணிற்கு வேட்பாளர் சீட்! அரசியல் கட்சியின் திடீர் முடிவு!

வீட்டு வேலை செய்யும் பெண்ணிற்கு வேட்பாளர் சீட்! அரசியல் கட்சியின் திடீர் முடிவு!

இந்த  வருடம் தேர்தலானது 5 மாநிலங்களில் நடக்கயிருக்கிறது.இதைத் தொடர்ந்து தமிழ்நாடு,கேரளா,புதுச்சேரி,மேற்குவங்கம் என அனைத்து மாநிலங்களிலும் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.அதும் தேர்தலின் போது தான் இந்த அரசியல்வாதிகள் அதிர்ச்சி தகவல்களை கொடுத்து மக்களை வியப்படைய செய்கின்றனர்.அந்த வகையில் மேற்குவங்கத்தில் வீட்டு வேலை செய்யும் பெண்ணிற்கு பாஜக வேட்பாளராக தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் ஆஸ்கிராம் என்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக பாஜக இவருக்கு சீட் வழங்கியுள்ளது.அந்த பெண்மணியின் பெயர் கலிதா மஜி.இவர் ஐந்து ஆண்டுகளாக அரசியலில் ஈடுபட்டு வருகிறார். இவர் பர்த்வான் என்னும் மாவட்டத்தில் ஓர் பகுதியில் வீட்டு வேலை செய்தது வருகிறார்.தனது இல்லற வாழ்க்ககையை நடத்துவதற்காக பல வீடுகளில் வீட்டு வேலை பார்த்து வருகிறார்.அதன்பின் இவர் கணவர் சாதாரண பிளம்பர் வேலை செய்தது வருகிறார்.இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.இவர் அரசு பள்ளியில் படித்து வருகிறார்.

இந்த காலத்தில் அரசியலில் சிறிது இடம் கிடைத்தாலே அதிக அளவு பணத்தை தான் சுருட்ட நினைப்பார்கள்.ஆனால் இவர் அதற்கு மாற்றாக உள்ளார்.இவரது எளிமையானது பார்பவருக்கு காமராஜர்,அண்ணா போன்றவர்களை காண்பது போல் தோன்றுகிறது.இவர் 2018ஆம் ஆண்டு நடந்த பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.அதுமட்டுமின்றி தனது தொகுதியிலுள்ள மக்களிடம் பிரச்சாரம் செய்வதற்காக ஒரு மாதம் தனது வீட்டு வேலைக்கு விடுப்பு அளித்துள்ளார்.

பாஜகவின் தேசிய பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் இவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.அதுமட்டுமின்றி பாஜக கட்சி கடின உழைப்பையும் ,திறமையையும் அங்கீகரிக்கும் என்றார்.

Leave a Comment