TN Gov: தமிழகத்தில் மிகவும் மலிவு விலையில் பாமர மக்கள் என அனைவரும் பயன் பெறும் வகையில் தான் நியாய விலைக் கடையில் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மத்திய மற்றும் மாநில அரசு இரு தரப்பும் இதன் மூலம் எண்ணற்ற நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர். அதே சமயம் ரேஷன் கடை ரீதியாக பொதுமக்கள் என தொடங்கி பணியாளர்கள் வரை பலரும் பலவித கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக குடோன்களிலிருந்து வரும் பொருட்களுடன் ஊழியர்கள் உடன் வருவதால் அவர்கள் மீதும் சந்தேகிக்கின்றனர். அதேபோல குடோன்களிலிருந்து மையத்தில் வைக்கப்படும் பொருட்களில் ஒவ்வொரு மூட்டையிலும் இரண்டு கிலோவிற்கு மேலாக எடை குறைந்து தான் உள்ளது. இதையெல்லாம் வைத்துப் பார்க்கையில் எங்கே எடை குறைகிறது என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதனையெல்லாம் மையமாக வைத்து குடோன் மற்றும் ரேஷன் கடை என அனைத்திலும் கம்ப்யூட்டர் உடன் எடை தராசை இணைக்க வேண்டும்மென்று பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். அதுமட்டுமின்றி ஒவ்வொரு நுகர்வோர் வரும்போதும் அவர்கள் கைரேகை பதிவு செய்தவுடன் அவர்கள் விவரங்கள் உடனடியாக வருவதில்லை. அச்சமயம் சர்வர் பிரச்சனை ஏற்படுகிறது.
இதையும் சரி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இது ரீதியாக கோரிக்கை ஏதும் நிறைவேற்றப்படாத நிலையில் இன்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் செய்துள்ளனர். அந்த வகையில் ரேஷன் கடை ஊழியர்கள் கருப்பு சட்டை அணிந்து ஒவ்வொரு மாவட்ட தலைநகரத்திலும் ஆரவாரம் செய்து வருகின்றனர். இதனால் பொதுமக்களுக்கு வழக்கம் போல் கிடைக்க வேண்டிய ரேஷன் பொருட்கள் கிடைக்கவில்லை.