காவலர்கள் என்பதால் சலுகை வழங்க முடியாது? இனி இவர்கள் பணி நேரத்தில் சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை!
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அறிவிப்பு ஒன்று வெளியானது.அந்த அறிவிப்பில் புதுடில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நாளொன்றுக்கு ஏராளமான வெளிநோயாளிகள் வந்து செல்கின்றனர்.அவர்களை பற்றி விவரங்களை பதிவு செய்யும் பணியில் இருக்கும் ஊழியர்கள் மொபைல் போன் பயன்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.அதனால் நோயாளிகள் சிரமம் அடைந்து வருவதாகவும் கூறப்பட்டது.
அதனால் நோயாளிகளின் விவரங்களை பதிவு செய்யும் பணியில் ஈடுபடுபவர்கள் அக்டோபர் 16 ஆம் தேதி முதல் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது.அதனால் ஊழியர்கள் அதற்கென உள்ள இடத்தில் செல்போன்களை வைக்க வேண்டும்.பணி முடிந்த பிறகு செல்போனை எடுத்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்உத்தரப்பிரதேச மாநில அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் காவலர்கள் முதல் ஐபிஎஸ் வரை உள்ள அதிகாரிகள் என அனைவரும் பணி நேரத்தில் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் போலீஸ் சீருடையில் இன்ஸ்டா ரீல்ஸ் பதிவிடுவது, பணி நேரத்தில் காரணம் இல்லாமல் அரட்டை அடிப்பது மற்றும் புகைப்படங்களை வெளியிடுவது போன்ற செயல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்த உத்தரவை அனைத்து காவல் நிலையிலும் அனைவரும் பின்பற்ற வேண்டும் என உத்தரப்பிரதேச டிஜிபு உத்தரவிட்டுள்ளார்.