உங்க இஷ்டத்துக்கு விளையாட முடியாது!! கேப்டன் ரோஹித் சர்மா காட்டம்!! 

Photo of author

By Rupa

உங்க இஷ்டத்துக்கு விளையாட முடியாது!! கேப்டன் ரோஹித் சர்மா காட்டம்!!
நேற்று(ஆகஸ்ட்2) இந்தியா மற்றும் இலங்கை அணிகள் விளையாடிய முதல் ஒரு நாள் போட்டி டையில் முடிந்தது. இதையடுத்து ரோஹித் சர்மா அவர்கள் போட்டி குறித்து பேட்டி அளித்துள்ளார்.
நேற்று(ஆகஸ்ட்2) இந்தியா மற்றும் இலங்கை பங்கேற்கும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டி இலங்கையில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து முதலில் களமிறங்கிய இலங்கை அணி 100 ரன்கள் எடுப்பதற்குள் 5 முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதையடுத்து களமிறங்கிய துணித் வெல்லலகே பொறுமையாக விளையாடி ரன் சேர்க்க தொடங்கினார்.
ஒரு புறம் துணித் வெல்லலகே ரன்களை சேர்க்க மறுபுறம் விக்கெட்டுகள் விழத் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய துணித் வெல்லலகே அரைசதம் அடித்து 67 ரன்கள் சேர்த்தார். ஹசரங்கா அவர்கள் 24 ரன்களும், ஜனித் லியனகெ 20 ரன்களும் சேர்த்தனர்.
இதனால் இலங்கை அணி 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 230 ரன்கள் சேர்த்தது. சிறப்பாக பந்து வீசிய இந்திய அணியில் அக்சர் பட்டேல், அர்ஷதீப் சிங் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர். முகமது சிராஜ், ஷிவம் துபே, குல்தீப் யாதவ், வாசிங்டன் சுந்தர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இதையடுத்து 231 ரன்களை இலக்காகக் கொண்டு இந்திய அணி களமிறங்கியது. இதையடுத்து 230 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதையடுத்து 14 பந்துகளுக்கு 1 ரன் தேவைப்பட்ட நிலையில் மீதமுள்ள 1 விக்கெட்டும் வீழ்ந்தது. இதையடுத்து முதல் ஒருநாள் போட்டி டிராவில் முடிந்தது.
இதையடுத்து போட்டி முடிந்து பேட்டி அளித்த இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அவர்கள் போட்டி குறித்து “50 ஓவர்களுக்கு 231 ரன்கள் என்பது எடுக்கக் கூடிய ஸ்கோர் தான். இந்த பிட்சில் சரியாக பேட்டிங் செய்ய வேண்டும். நாங்களும் சிறப்பாக பேட்டிங் செய்தோம். இருப்பினும் பேட்டிங் செய்யும் பொழுது எங்களுக்கு மொமண்டம் கிடைக்கவில்லை.
முதல் ஒருநாள் போட்டி எங்கள் கையில் இருந்தது. ஆனால் இரண்டு விக்கெட்டுகள் விழுந்தவுடன் நாங்கள் மிகுந்த நெருக்கடியில் சிக்கித் தவித்தோம். இருப்பினும் அந்த நெருக்கடியில் இருந்து கேஎல் ராகுல் மற்றும் அக்சர் பட்டேல் இருவரும் சிறப்பாக விளையாடி மீட்டு வந்தார்கள்.
ஆனால் முதல் ஒருநாள் போட்டியின் முடிவு எங்களுக்கு கொஞ்சம் ஏமாற்றம் அளிக்கிறது. 14 பந்துகளுக்கு 1 ரன் தேவைப்பட்ட நிலையில் அது கூட எடுக்க முடியாதது எங்களுக்கு ஏமாற்றம் அளித்தது.
இந்த பிட்சில் உங்களுடைய விருப்பத்திற்கு ஏற்ப பேட்டிங் செய்வது என்பது இயலாத காரியம் ஆகும். இந்த பிட்சில் சுழற்பந்து வீச்சு தொடங்கியவுடன் பேட்டிங் மாறும். அது எங்களுக்கு தெரியும்.
இந்த மைதானத்தில் பந்து தேய்ந்த பிறகு விளையாடுவது என்பது முடியாத காரியம். இலங்கை அணி கடைசி வரை சிறப்பாக விளையாடியது. அதற்கான சிறப்பான முடிவு இலங்கை அணிக்கு பரிசாக கிடைத்துள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.