மூக்கடைப்பால் தினமும் தூங்க முடியவில்லையா.. உடனடியாக சரி செய்ய இதோ எளிய வழி!!

0
203
#image_title

மூக்கடைப்பால் தினமும் தூங்க முடியவில்லையா.. உடனடியாக சரி செய்ய இதோ எளிய வழி!!

நம்மில் பலருக்கு சளி பிடித்துவிட்டால் மூக்கடைப்பு போன்ற பல பிரச்சனைகள் வரும். மூக்கடைப்பு இருந்தால் நம்மால் சரியாக சுவாசிக்க முடியாது. சரியாக தூங்க முடியாது. இந்த மூக்கடைப்பு பிரச்சனையை எவ்வாறு சரிசெய்வது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

 

சளி நோய் தொற்றால் ஏற்படும் மூக்கடைப்பை சரி செய்ய ஒரே ஒரு குருமிளகு அதாவது மிளகு ஒன்றே போதும். இந்த ஒரே ஒரு மிளகை வைத்து எவ்வாறு மூக்கடைப்பை சரி செய்வது என்று பார்க்கலாம்.

 

இந்த வைத்தியத்தை செய்ய தேவையான பொருள்கள்…

 

* மிளகு

* காமாட்சியம்மன் விளக்கு அல்லது ஏதாவது ஒரு விளக்கு

* எண்ணெய்

 

வைத்தியத்தை செய்யும் முறை…

 

முதலில் காமாட்சியம்மன் விளக்கை எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதில் எதாவது ஒரு எண்ணெயை ஊற்றி திரி வைத்து பற்ற வைக்க வேண்டும். இந்த வைத்தியத்தை இந்த விளக்கு தீபத்தில் செய்தால்தான் முழுப்பலன் கிடைக்கும். அதனால் இந்த விளக்கைத் தான் பயன்படுத்த வேண்டும்.

 

எடுத்து வைத்துள்ள மிளகை துணி தைக்கும் ஊசியில் குத்தி வைக்கவும்.இந்த மிளகு ஊசியின் நுனியில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். பிறகு இந்த மிளகை எரிந்து கொண்டிருக்கும் அந்த விளக்கில் காட்ட வேண்டும். மிளகும் பற்றி எரியும்.

 

மிளகில் இருந்து புகை வரத் தெடங்கும் பொழுது தீபத்தில் காட்டுவதை எடுத்து மூக்கடைப்பு பிரச்சனை உள்ளவர்கள் இந்த மிளகை மூக்கின் அருகில் வைத்து சுவாசிக்க வேண்டும்.

 

மிளகில் இருந்து வரும் புகை இரண்டிலிருந்து மூன்று நிமிடங்கள் வரை வரும். இந்த புகையை மூக்கடைப்பு உள்ளவர்கள் நன்றாக சுவாசித்தால் மூக்கடைப்பு பிரச்சனை சரியாகிவிடும்.

Previous articleமேஷம் ராசி – இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பயண வாய்ப்புகளால் வாழ்க்கை மேம்படும் நாள்!!
Next articleமகரம் ராசி – இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு உடன்பிறப்புகளின் உதவி கிடைத்து மகிழும் நாள்!