மரப் பொருட்களை மெல்ல மெல்ல அரித்து சேதமாக்கும் கரையான்களை வீட்டில் இருந்து அழிக்க முடியாமல் பலரும் கஷ்டப்பட்டு கொண்டிருக்கின்றனர்.மரப் பொருட்கள் அதிகம் உள்ள வீடுகள்,மண் வீடுகளில் அழையா விருந்தாளியாக இந்த கரையான்கள் நுழைந்துவிடுகிறது.ஈரமான இடங்களிலும் மண்ணுக்கு அடியிலும் வசிக்க கூடிய கரையான்கள் ஒருமுறை வீட்டிற்குள் நுழைந்தவிட்டால் நிச்சயம் பெரியளவில் சேதத்தை ஏற்படுத்திவிடும்.
எனவே வீட்டில் கரையான்கள் வராமல் இருக்கவும் வந்த கரையான்களை ஒழித்துக் கட்டவும் இங்கு சொல்லப்பட்டுள்ள குறிப்பை பின்பற்றுங்கள்.
1)வினிகர்
ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் வெது வெதுப்பான தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி வினிகர் ஊற்றி மிக்ஸ் செய்ய வேண்டும்.இதை வீட்டில் இருக்கின்ற மர பொருட்கள் மீது ஸ்ப்ரே செய்து பராமரித்து வந்தால் கரையான்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தலாம்.
2)கிராம்பு
ஒரு தேக்கரண்டி இலவங்கம் அதாவது கிராம்பை எடுத்து தண்ணீரில் ஊறவைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இதை உரலில் போட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.இந்த கிராம்பு பேஸ்டை ஸ்ப்ரே பாட்டிலில் போட்டு தண்ணீர் ஊற்றி மிக்ஸ் செய்து இதை வீட்டில் இருக்கின்ற மர பொருட்கள் மீது ஸ்ப்ரே செய்து பராமரித்து வந்தால் கரையான்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தலாம்.
3)சிட்ரஸ் எண்ணெய்
பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் சிறிதளவு சிட்ரஸ் எண்ணெய் ஊற்றி மிக்ஸ் செய்ய வேண்டும்.
பிறகு ஒரு காட்டன் துணி அல்லது பஞ்சு ஊறவைத்து மரப் பொருட்களை துடைக்க வேண்டும.இப்படி செய்தால் மரப் பொருட்களில் கரையான் பிடிக்காமல் இருக்கும்.
4)வேப்ப எண்ணெய்
ஒரு பாத்திரத்தில் வெது வெதுப்பான தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி வேப்ப எண்ணெய் ஊற்றி மிக்ஸ் செய்ய வேண்டும்.இதை மரப் பொருட்கள் மீது ஸ்ப்ரே செய்தால் கரையான்கள் வராமல் இருக்கும்.