குளியலறை மற்றும் கழிவறையை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியது மிக முக்கியமான ஒன்றாகும்.கழிவறையில் தான் பாக்டீரியாக்கள் மற்றும் கிருமி தொற்றுகள் அதிகளவு பரவி காணப்படுகிறது.கழிவறைக்கு சென்று வந்த பின்னர் கை கால்களை சுத்தமாக கழுவ வேண்டியது எவ்வளவு முக்கியமோ அதேபோல் ஒவ்வொரு முறையும் கழிவறைக்கு சென்று வந்த பின்னர் அதை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியது முக்கியம்.
கழிவறையில் அதிகளவு கிருமி தொற்றுகள் பரவி இருந்தால் கடுமையான துர்நாற்றத்திற்கு வழிவகுத்துவிடும்.இது வீட்டில் இருப்பவர்களுக்கு மட்டுமின்றி,வீட்டிற்கு வரும் விருந்தாளிகளுக்கும் தர்ம சங்கடத்தை உண்டாக்கிவிடும்.
வீட்டு கழிவறையை துர்நாற்றம் இன்றி சுத்தமாக வைத்துக் கொள்வது குறித்து இங்கு பார்ப்போம்.வாரம் ஒருமுறை பேக்கிங் சோடா,வினிகர் கொண்டு பாத்ரூம் டாய்லெட்டை சுத்தம் செய்ய வேண்டும்.
கழிவறையை பயன்படுத்திய பிறகு முறையாக தண்ணீர் ஊற்றி செய்துவிட வேண்டும்.கழிவறையில் அழுக்கு படியாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.விளம்பரங்களில் வரும் டாய்லெட் க்ளீனரை பயன்படுத்தினாலும் துர்நாற்றம் மட்டும் நீங்கியபாடில்லை என்று புலம்புபவர்கள் ஜட்ஸ் 5 ரூபாய் செலவு செய்து தீர்வு காணலாம்.
அந்த பொருள் சூடம் அதாவது கற்பூரம்.கற்பூரத்தை ஒரு டப்பா தண்ணீரில் போட்டு கரைத்து டாய்லெட்டில் ஊற்றினால் துர்நாற்றம் நீங்கி நறுமணம் வீசும்.அதேபோல் எலுமிச்சை சாறு மற்றும் சோடா உப்பை தண்ணீரில் கலந்து டாய்லெட்டை சுத்தம் செய்தால் துர்நாற்றம் நீங்கிவிடும்.