பல் வலி தாங்க முடியவில்லையா? அதுக்கு வெங்காயம் ஒன்று மட்டும் போதும்! 

Photo of author

By Sakthi

பல் வலி தாங்க முடியவில்லையா? அதுக்கு வெங்காயம் ஒன்று மட்டும் போதும்!
நாம் அனைவரும் தினமும் நம்முடைய வாயை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதாவது நாம் ஒவ்வொரு வேலையும் உணவு சாப்பிட்ட பிறகு சுடுதண்ணீரை பயன்படுத்தி வாய் கொப்பளித்து வரவேண்டும்.
இவ்வாறு வாய் கொப்பளிக்கவில்லை என்றால் நம்முடைய வாயில் கிருமிகள் ஏற்படும். இந்த கிருமிகள் அனைத்தும் நம்முடைய பற்களை பாதிக்கும். அதாவது நம்முடைய பற்களை அரித்து நன்றாக இருக்கும் பற்களை சொத்தை பற்களாக மாற்றி விடும்.
இவ்வாறு சொத்தை பற்கள் ஏற்படும் பொழுது நமக்கு பல் வலி ஏற்படுகின்றது. பல் வலி ஏற்படும் பொழுது அனைவரும் தைலம் பயன்படுத்துவார்கள். அல்லது மாத்திரையை இடித்து பொடியாக்கி பல் வலி ஏற்படும் இடத்தில் வைப்பார்கள். ஆனால் வலி குறையாது. ஒரு சில சமயங்களில் பல் வலியை இந்த முறைகள் அதிகரிக்கும். எனவே பல் வலியை குணப்படுத்த என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்.
பல் வலியை குணப்படுத்த நாம் வெங்காயத்தை பயன்படுத்தலாம். வெங்காயத்தில் பல வகையான ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றது. வெங்காயம் பலவிதமான நோய்களுக்கும் தீர்வாக அமைகின்றது. வெங்காயத்தை பல் வலியை குணப்படுத்த என்ன செய்ய வேண்டும் என்று தற்போது பார்க்கலாம்.
பல் வலியை குணப்படுத்த வெங்காயத்தை பயன்படுத்தும் முறை…
சின்ன வெங்காயத்தை எடுத்து தோல் உரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதை மிக்சி ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த இந்த விழுதில் இருந்து வெங்காயச் சாறு மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் இந்த சாற்றை ஒரு பவுலில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பஞ்சை எடுத்து அதை வெங்காயச் சாறில் தொட்டுக் கொள்ள வேண்டும். பின்னர் அந்த பஞ்சை பல்வலி உள்ள இடத்தில் வைத்தால் பல் வலி குறையும்.