ஆன்லைன் வங்கி சேவைகளை பயன்படுத்த முடியாது! எஸ்.பி.ஐ. அறிவிப்பு!
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக திகழும் எஸ்பிஐ முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி வாடிக்கையாளர்கள் எந்த ஒரு அசௌகரியத்தையும் தவிர்க்க ஆதார் அட்டையுடன், பான் கார்டை இணைக்க வேண்டும் என்று அறிவித்திருந்தது. இது குறித்து அந்த வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், எந்த ஒரு சிரமத்தை தவிர்க்கவும், தடையற்ற வங்கி சேவையை தொடர்ந்து, அனுபவிக்கும் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு தங்கள் பான் கார்டுடன் ஆதார் இணைக்க அறிவுறுத்துகிறோம் என்று தெரிவித்திருந்தது.
இதை மத்திய அரசு ஏற்கனவே அறிவித்து இருந்த நிலையில் தற்போது வங்கியும் கட்டாயம் செய்ய வேண்டும் என தெரிவித்து உள்ளது. இதனால் ஆன்லைன் வங்கி மற்றும் பிற வங்கி சேவைகளை தடையின்றி அனுபவிக்க முடியும் என்றும் கூறியிருந்தது. தங்கள் பான் கார்டை ஆதாருடன் அவர்களது நினைக்கவில்லை என்றால் அவர்களின் பான் கார்டு அட்டை செயல் படாது என்றும், வருமானவரி அறிக்கையை அதாவது ஐ.டி.ஆர். தாக்கல் செய்யவோ அல்லது ஆன்லைன் பரிவர்த்தனைகளை பயன்படுத்தவும் முடியாது என்றும் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்களின் பான் மற்றும் ஆதார் கார்டு இணைக்க நீங்கள் அதிகாரப்பூர்வ வருமானவரி வலைத்தளத்தை பார்வையிட வேண்டும். பின்னர் லின்க் ஆதார் என்பதை கிளிக் செய்ய வேண்டும் என்று ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது.
எனவே மக்கள் இதை பயன்படுத்தி பான் கார்டு மற்றும் ஆதாரை இணைத்து பயன்படும்படி எஸ்.பி.ஐ வலியுறுத்தி உள்ளது.