ஜூலை மாதம் 31 ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு!

0
138

தமிழ்நாட்டில் தரவுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை மாதம் 31 ஆம் தேதி வரையில் விதிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் ஜூலை மாதம் 19ஆம் தேதியுடன் ஊரடங்கு நடைபெறவிருக்கின்ற நிலையில், இதுதொடர்பாக நேற்றையதினம் முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை செய்து இருக்கின்றார்.

அந்த சமயத்தில் பிரதமர் நரேந்திர மோடியும் தமிழகத்தின் முதலமைச்சர் உட்பட 6 மாநில முதலமைச்சர்கள் உடன் ஆலோசனை செய்து இருக்கின்றார். அந்த நேரத்தில் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கேரளா, ஒடிஷா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தான் 80 சதவீத பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. மூன்றாம் அலையை எதிர்கொள்வதற்கு ஏற்றவாறு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்ட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தி இருக்கின்றார்.

இவ்வாறான சூழலில், நேற்று இரவு ஊரடங்கு தளர்வு குறித்து தமிழக அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அந்த அறிவிப்பில் நோய்தொற்று பாதிப்பை குறைப்பதற்கு தேவையான கட்டுப்பாடுகளை எதிர்வரும் 31 ஆம் தேதி வரையில் அமல்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கிறது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருக்கின்றார்.

அதோடு தற்சமயம் தமிழகத்தில் நடைமுறையில் இருக்கின்ற தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 19ஆம் தேதியுடன் முடிவடைய இருக்கின்ற சூழலில், மாநிலத்தில் நோய்தொற்று பாதிப்பின் நிலையை கண்காணித்து தொடர்ச்சியாக கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை நினைவில் வைத்து அனைத்து மாவட்டங்களிலும் கீழ்கண்ட செயல்பாடுகளுக்கு வரும் 31-ஆம் தேதி காலை 6 மணி வரையில் தொடர்ச்சியாக தடை விதிக்கப்படுகிறது என்று தெரிவித்திருக்கிறார்.

மாநிலங்களுக்கு இடையே தனியார் மற்றும் அரசு பேருந்து போக்குவரத்து புதுச்சேரி தவிர்த்து மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களை தவிர்த்து சர்வதேச விமான போக்குவரத்து மற்றும் தியேட்டர்கள் கேளிக்கை விடுதிகள், நீச்சல் குளங்கள், பொதுமக்கள் பங்கேற்று கொள்ளும் சமுதாய மற்றும் அரசியல் சார்ந்த நிகழ்ச்சிகள் மற்றும் பொழுதுபோக்கு விளையாட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அதோடு பூங்காக்கள் போன்றவற்றிற்கு தடை விதிக்கப்படுகிறது. நோய்தொற்று பாதிப்பை கட்டுப்படுத்தும் விதத்தில் திருமண நிகழ்ச்சிகளில் 50 நபர்கள் மட்டுமே பங்க் ஏற்றுக்கொள்ளலாம். இறுதிச் சடங்குகளில் இருபது நபர்கள் மட்டும் தான் பங்கேற்க முடியும் என்று தெரிவித்திருக்கிறார்.

அதோடு நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர்த்து அனைத்து பகுதிகளிலும் இதற்கு முன்னரே அனுமதிக்கப்பட்டிருக்கும் செயல்பாடுகள் தொடர்ந்து அனுமதிக்கப்படுகின்றன என்று தெரிவித்திருக்கின்ற அவர், ஆசிரியர்கள் பள்ளிக்கு சென்று தங்களுடைய பணிகளை தொடரலாம் என்றும் சொல்லி இருக்கின்றார். தொழிற் பயிற்சி பெறும் மாணவர்களின் வேலைவாய்ப்பினை மனதில் வைத்து அனைத்து தொழிற்பயிற்சி நிலையங்கள், மற்றும் தட்டச்சு சுருக்கெழுத்து பயிற்சி நிலையங்கள் போன்றவற்றில் ஒரு சமயத்தில் 50% மாணவர்களுடன் தொடர்ச்சியான பயிற்சி முறையில் ஈடுபடலாம் நோய் தொற்றும் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி அவர்கள் செயல்பட வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.

அதோடு பள்ளிக்கூடங்களில் மாணவர்களின் சேர்க்கை புத்தக வினியோகம் பாடத்திட்ட தயாரிப்பு போன்ற அனைத்து நிர்வாக பணிகளும் எந்தவிதமான தங்குதடையின்றி நடைபெறுவதற்காக ஆசிரியர்கள் பள்ளிக்கு சென்று பணியாற்ற அனுமதி வழங்கப்படுகிறது என்று தெரிவித்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.