மகரம் – இன்றைய ராசிபலன்!! அலைச்சல் கூடும் நாள்!!

Photo of author

By Selvarani

மகரம் – இன்றைய ராசிபலன்!! அலைச்சல் கூடும் நாள்!!

மகர ராசி அன்பர்களே ராசி அதிபதி சனிபகவான்.இன்றைக்கு இந்த நாள் ராசியில் சந்திர பகவான் இருப்பதோடு மட்டுமல்லாமல் சனீஸ்வர பகவானோடும் சேர்ந்து இருப்பதால் கவனமாக இருப்பது நல்லது. குடும்ப உறவுகளிலும் மற்றும் கணவன் மனைவியிடத்தில் பிரச்சனைகள் வரலாம் என்பதால் அனுசரித்து செல்வது நல்லது.

 

வருமானம் வந்து சேர்வதில் காலதாமதம் ஆகலாம். உத்தியோகத்தில் வீண் அழைச்சல் உண்டாகும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக சில குழப்பங்கள் வந்து சேரலாம்.

 

அரசியலில் இருக்கும் நண்பர்கள் சில குழப்பமான சூழ்நிலைகளில் இருப்பார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேர்வதில் காலதாமதம் ஆகலாம்.

 

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு வீண் அலைச்சல் உண்டாகும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் எந்த ஒரு விஷயத்திலும் கவனத்தை மேற்கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

 

மாணவ மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்றால் கல்வியில் கவனமாக செயல்பட வேண்டும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்கள் எந்த ஒரு விஷயத்திலும் கவனத்தை மேற்கொள்வது நல்லது.

 

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான வெண்மை நிற ஆடையை அணிந்து ஸ்ரீ சரஸ்வதி தேவியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.