மகரம் ராசி – இன்றைய ராசிபலன்!! ஆன்மீக எண்ணங்கள் அதிகரிக்கும் நாள்!

0
192
Capricorn – Today's Horoscope!! An exciting day!
Capricorn – Today's Horoscope!! An exciting day!

மகரம் ராசி – இன்றைய ராசிபலன்!! ஆன்மீக எண்ணங்கள் அதிகரிக்கும் நாள்!

மகர ராசி அன்பர்களே ராசி அதிபதி சனி பகவான்.இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு ஆன்மீக எண்ணங்கள் அதிகரிக்கும் நாள். குடும்ப உறவு சிறப்பாக உள்ளது. கணவன் மனைவியிடையே குழந்தைகள் மூலம் சில நன்மைகள் உண்டாகும்.

வருமானம் திருப்திகரமாக அமையும். உத்தியோகத்தில் வேலை பளு குறையும். தொழில் மற்றும் வியாபாரம் சிறப்பாக அமையும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் நுணுக்கமாக செயல்படுவார்கள். கலைத்துறையை சேர்ந்த அன்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு வீண் மன குழப்பம் குறையும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் குழந்தைகள் மூலம் சில நன்மைகளை கிடைக்க பெறுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்வீர்கள்.

மாணவ மாணவிகள் கல்வியில் திறம்பட செயல்பாடுவார்கள். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக இருப்பார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு எடுக்கும் முயற்சிகள் காலதாமதம் ஆகும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சிவப்பு நிற ஆடை அணிந்து எம்பெருமான் முருகப்பெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு நன்மை தரும் நாளாக அமையும்.

Previous articleதுலாம் ராசி அன்பர்களே! இந்த சனிப்பெயர்ச்சி உங்களுக்கு எப்படி இருக்கின்றது என தெரிந்து கொள்ளுங்கள்!
Next articleசர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த மருந்து! நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here