மகரம் ராசி – இன்றைய ராசிபலன்!! தைரியம் உண்டாகும் நாள்!

0
226
Capricorn – Today's Horoscope!! An exciting day!
Capricorn – Today's Horoscope!! An exciting day!

மகரம் ராசி – இன்றைய ராசிபலன்!! மகிழ்ச்சியும் தைரியமும் உண்டாகும் நாள்!

மகர ராசி அன்பர்களே ராசி அதிபதி சனி பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு மகிழ்ச்சியும் தைரியமும் உண்டாகும் நாள். காலையில் சந்திர பகவான் தனவாக்கக் குடும்ப ஸ்தானத்தில் இருப்பதால் மகிழ்ச்சியாக காணப்படுவீர்கள். மதியத்திற்குப் பிறகு சந்திர பகவான் சகாயஸ்தானத்திற்கு வருவதால் இளைய உடன் பிறப்புகள் மூலம் சில நன்மைகளை நீங்கள் எதிர்பார்க்கலாம். நிதி அற்புதமாக உள்ளது.

கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் மீது பாச மழை பொழிவார்கள். உத்தியோகத்தில் நீங்கள் எதிர் பார்க்க முன்னேற்றம் வந்து சேரும். தொழில் வியாபாரம் அருமையாக நடைபெறும். சக வியாபாரிகள் உங்கள் ஆலோசனைகளை கேட்டு வருவார்கள். கொடுக்கல் வாங்கல் அமைதியான பாதையில் செல்லும்.

உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு சந்தோஷமான செய்தி கிடைக்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் மனதில் குதூகலமாக செயல்பட்டு வெற்றி அடைவார்கள். நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகள் மூலம் சில நன்மைகளை நீங்கள் இன்றைய தினம் எதிர்பார்க்கலாம்.

அரசியல்வாதிகள் புதுமனை புது வீடு வாங்கி மகிழ்வார்கள். கலை துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரலாம். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வார்கள்.

இன்றைய தினம் உங்கள அதிர்ஷ்ட நிறமான பச்சை நிற ஆடை அணிந்து ஸ்ரீ மீனாட்சி அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleஉங்கள் பற்களில் உள்ள கரை ஒரே வாரத்தில் மறைய வேண்டுமா! இதோ இதனை பயன்படுத்தினால் போதும்!
Next articleகும்பம் – இன்றைய ராசிபலன்!! மகிழ்ச்சி உண்டாகும் நாள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here