மகரம் ராசி – இன்றைய ராசிபலன் !! பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள்!

0
206
Capricorn – Today's Horoscope!! An exciting day!
Capricorn – Today's Horoscope!! An exciting day!

மகரம் ராசி – இன்றைய ராசிபலன் !! பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள்!

மகர ராசி அன்பர்களே ராசி அதிபதி சனி பகவான்.இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள். ராசிக்குள் சந்திரன் மற்றும் சனி பகவான் இருவரும் சேர்ந்து உள்ளதால் பொறுமையுடன் செயல்படுவது நல்லது.

குடும்ப உறவுகள் சிறு சிறு குழப்பங்கள் இருப்பதால் கவனமாக இருப்பது நல்லது. கணவன் மனைவியிடையே ஒற்றுமை குறைந்து காணப்படும்.

வருமானம் வந்து சேர்வதில் காலதாமதம் ஆக்கி எரிச்சலை உண்டாக்கும். உத்தியோகத்தில் வேலை பளு அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக உங்களுக்கு அலைச்சல்களை ஏற்படுத்துவதால் கவனமாக இருப்பது நல்லது.

அரசியலில் இருக்கும் அன்பர்கள் பொறுமை காப்பது அவசியம். கலைத்துறை சேர்ந்த நண்பர்கள் கவனமுடன் செயல்பட வேண்டும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு வீண் அலைச்சல் வந்து சேரலாம். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் மன குழப்பத்துடன் செயல்படுவார்கள். உடல் ஆரோக்கிய சீராக இருப்பதற்கு மாற்று மருத்துவத்தை அணுகுவீர்கள்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் குழப்பமான சூழ்நிலைகள் நிலவும் என்பதால் கவனமாக இருப்பது நல்லது. மூத்த வயதில் உள்ள அன்பர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வது அவசியம். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு எந்த ஒரு வேலையும் இழுபறி ஆகும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான மஞ்சள் நிற ஆடை அணிந்து தட்சிணாமூர்த்தி சுவாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு நன்மை தரும் நாளாக அமையும்.

Previous articleபற்களில் உள்ள கறைகள் நீங்க வேண்டுமா! நான்கு பொருட்கள் மட்டும் போதும்!
Next articleகும்பம் ராசி – இன்றைய ராசிபலன் !! செலவுகள் அதிகரிக்கும் நாள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here