மகரம் ராசி – இன்றைய ராசிபலன்!! உஷாராக இருக்க வேண்டிய நாள்!

Photo of author

By CineDesk

மகரம் ராசி – இன்றைய ராசிபலன்!! உஷாராக இருக்க வேண்டிய நாள்!

மகர ராசி அன்பர்களே ராசி அதிபதி சனி பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு உஷாராக இருக்க வேண்டிய நாள். ஏனென்றால் இன்றும் சந்திராஷ்டமம் உள்ளது. வாகனப் பயணம் மேற்கொள்பவர்கள் மிக கவனமாக இருப்பது நல்லது. கணவன் மனைவியிடையே காலையிலேயே சிறுசிறு பிரச்சனைகள் வரக்கூடும். ஆகையால் அனுசரிச்சு போவது மிக நன்று.

வருமானம் வந்து சேர்வதில் காலதாமதம் ஆகலாம். உத்தியோகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது மிகவும் அவசியம். தொழில் வியாபாரம் தொடர்பாக சில இன்னல்கள் இடையூறுகள் வரலாம் என்பதால் கூட்டாளிகளையும் வாடிக்கையாளர்களையும் அனுசரிச்சு செல்வது நல்லது. அரசியலில் இருக்கும் அன்பர்கள் அமைதியாக செயல்பட வேண்டும். கலைத்துறையில் இருக்கும் அன்பர்கள் கவனமாக செயல்பட வேண்டும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கும் மனதில் ஒரு சில குழப்பம் அச்சம் செயல்பட தோன்றும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் எடுக்கும் முயற்சிகளில் கவனமாக இருப்பது நல்லது. ஏனெனில் ஈழுபரி ஆகலாம். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க வேண்டும் என்றால் உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்ள வேண்டும்.

மாணவ மாணவிகள் கல்வியில் திறம்பட செயலாற்ற வேண்டும் என்றால் கடுமையாக பாடுபட வேண்டி வரும். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறப்பு அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. வெளிநாட்டில் வசிக்கும் அன்பர்கள் எடுக்கும் முயற்சியில் சற்று காலதாமதம் ஆகலாம் என்பதால் கவனமாக இருப்பது நல்லது.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ஊதா நிற ஆடை அணிந்து ஸ்ரீதேவி கருமாரி அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்