மகரம் ராசி – இன்றைய ராசிபலன்!! இனிய பலன் கிடைக்க இறைவனை நாட வேண்டிய நாள்!

0
172
Capricorn – Today's Horoscope!! An exciting day!
Capricorn – Today's Horoscope!! An exciting day!

மகரம் ராசி – இன்றைய ராசிபலன்!! இனிய பலன் கிடைக்க இறைவனை நாட வேண்டிய நாள்!

மகர ராசி அன்பர்களே ராசி அதிபதி சனி பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு இனிய பலன் கிடைக்க இறைவனை நாட வேண்டிய நாள். இன்று உங்கள் ராசியில் சந்திராஷ்டம இருப்பதால் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். அருகில் உள்ள ஆலய தரிசனம் உங்களுக்கு நன்மையை தரும்.

குடும்ப உறவு மற்றும் கணவன் மனைவியுடைய சிறு சிறு பிரச்சனைகள் வரும் என்பதால் கவனமாக இருப்பது நல்லது. வாகன பயணங்களில் எச்சரிக்கை அவசியம். வருமானம் வந்து சேர்வதில் காலதாமதம் ஆகலாம். உத்தியோகத்தில் வேலை பளு அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக வீண் அலைச்சல் வந்த சேரும்.

அரசியலில் இருக்கும் நண்பர்கள் குழப்பமாக செயல்படுவார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் இழுபறி ஆகும். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் ஒருவித குழப்பம் அச்சம் தோன்றும். கொடுமை நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் எந்த ஒரு விஷயத்திலும் நிதானத்தைக் கடைப்பிடிப்பது அவசியம். உடல் ஆரோக்கியம் சீராக உணவு கட்டுப்பாடு முக்கியம்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் சந்தோஷமான சூழ்நிலை நிலவ வேண்டும் என்றால் கவனமாக படிப்பது நல்லது. மூத்த வயதை சேர்ந்த அன்பர்கள் உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு நாட்டு மருத்துவத்தை அணுகுவது நல்லது. வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்கள் எந்த ஒரு விஷயத்திலும் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது.

இன்றைய தினம் உங்கள அதிர்ஷ்ட நிறமான பச்சை நிற ஆடை அணிந்து ஸ்ரீ மீனாட்சி அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleஉடல் எடையை குறைக்க சிறந்த டிப்ஸ்! இவ்வாறு அமர்ந்து ஒரு டம்ளர் இதனை குடித்தால் போதும்!
Next articleகும்பம் – இன்றைய ராசிபலன்!! கலகலப்பிற்கு குறைவில்லாத நாள்!