உடல் எடையை குறைக்க சிறந்த டிப்ஸ்! இவ்வாறு அமர்ந்து ஒரு டம்ளர் இதனை குடித்தால் போதும்!

0
93

உடல் எடையை குறைக்க சிறந்த டிப்ஸ்! இவ்வாறு அமர்ந்து ஒரு டம்ளர் இதனை குடித்தால் போதும்!

தற்போது உணவு முறையின் காரணமாகவும் மேலும் நாம் சரியான நேரத்தில் உணவுகளை எடுத்துக் கொள்ளாத காரணத்தினாலும் உடல் பருமன் அதிகரிக்கிறது. அவ்வாறு நம் உடல் எடையால் அவதிப்பட்டு கொண்டிருப்பவர்கள் இந்த பதிவினை பயன்படுத்தி உடல் குறைக்க என்ன செய்யலாம் என்று காணலாம்.

செய்முறை:முதலில் ஒரு டீஸ்பூன் அளவிற்கு துருவிய இஞ்சியை ஒரு பாட்டிலில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதனுடன் எலுமிச்சை பழத்தை இரண்டு துண்டுகளாக வெட்டி சேர்த்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு இரண்டு துண்டு பட்டை, அதனையடுத்து கொதிக்கும் வெந்நீர் ஒரு டம்ளர் அளவிற்கு அதில் ஊற்ற வேண்டும்.

அதனை பத்து நிமிடம் மூடி வைக்க வேண்டும். அதன் பிறகு மிதமான சூட்டில் இருக்கும் பொழுது ஒரு டம்ளரில் வடிகட்டி அதனுடன் ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து காலை எழுந்தவுடன் பல் துலக்கி விட்டு வெறும் வயிற்றில் குளிர்ந்த நீர் மற்றும் வெந்நீர் ஏதேனும் ஒன்றை ஒரு டம்ளர் அளவிற்கு குடிக்க வேண்டும்.

அதன் பிறகு நாம் செய்து வைத்துள்ளதை நாம் யோகாசனம் செய்யும் பொழுது எவ்வாறு அமர்ந்திருப்போமோ அவ்வாறு அமர்ந்து இதனை மிக மெதுவாக குடிக்க வேண்டும்.

இதனை குடித்த பிறகு அரை மணி நேரத்திற்கு வேறு எந்த உணவையும் பருக கூடாது. இவ்வாறு குடித்து வர உங்கள் உடல் எடையில் நல்ல மாற்றம் ஏற்படும்.

author avatar
Parthipan K