மகரம் – இன்றைய ராசிபலன்!எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள்!!

Photo of author

By Selvarani

மகரம் – இன்றைய ராசிபலன்!எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள்!!

மகர ராசி அன்பர்களே ராசி அதிபதி சனி பகவான்.இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள். இன்றைக்கும் சந்திராஷ்டமம் உங்கள் ராசியில் தொடர்வதால் பேசும் வார்த்தைகள் மற்றும் எடுக்கும் முயற்சிகளில் கவனமாக இருப்பது நல்லது. நிதி வருவதற்கு வாய்ப்புகள் குறைவு.

 

கணவன் மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்களின் மூலம் இன்றைய நாள் சில பிரச்சனைகளை நீங்கள் எதிர் பார்க்கலாம். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக சில இன்னல்கள் இடையூறுகள் வரலாம் என்பதால் கூடுமானவரை கூட்டாளிகளையும் வாடிக்கையாளர்களையும் அனுசரித்து செல்வது அவசியம். கொடுக்கல் வாங்கலில் கவனம் வேண்டும்.

 

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு வீண் மன குழப்பம் வந்து சேரும். குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்களுக்கு உடலில் ஒரு வித சோர்வு அசதி வந்து மறையும். நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகளின் மூலம் சில பிரச்சனைகள் வந்து சேரும் என்பதால் கூடுமானவரை அவர்களிடம் வீண் விவாதம் செலுத்துவதை தவிர்த்தல் நல்லது.

 

அரசியல்வாதிகள் அமைதியாக செயல்பட வேண்டும். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வருவதில் காலதாமதம் ஆகலாம். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வது அவசியம்.

 

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான அடர் நீல நிற ஆடை அணிந்து துர்க்கை அம்மன் வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.