மகரம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு யோசித்து செயல்பட வேண்டிய நாள்!!

0
96
#image_title

மகரம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு யோசித்து செயல்பட வேண்டிய நாள்!!

மகர ராசி அன்பர்களே ராசி அதிபதி சனி பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு யோசித்து செயல்பட வேண்டிய நாள். சந்திராஷ்டமம் உங்கள் ராசியில் இருப்பதால் கவனமாக இருப்பது நல்லது. குடும்ப உறுப்பினர்களிடம் கலந்துரையாடி சில செயல்களை செய்வது நல்லது. இன்றைய தினம் புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. வாகன பயணங்களில் கவனமாக இருக்க வேண்டும்.

வருமானம் வருவதற்கு வாய்ப்புகள் குறைவாக உள்ளது. உத்தியோகத்தில் மேல் அதிகாரிகளை அனுசரித்து செல்ல வேண்டும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக சில இடையூறுகள் வந்து சேரலாம். குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற பகைமை பாராட்ட வேண்டாம். கணவன் மனைவியை நெருக்கம் குறையலாம். அரசியலில் இருக்கும் நண்பர்கள் அமைதிக்காக வேண்டும். கலைத்துறையை சேர்ந்த அன்பர்கள் எந்த ஒரு வேலையிலும் நிதானத்தைக் கடைப்பிடிப்பது அவசியம்.

உத்தியோகம் செல்லும் பெண்கள் மன குழப்பத்திற்கு ஆளவார்கள். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு எடுக்கும் வேலைகள் இழுபறி ஆகும். உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்ளுங்கள். மாணவ மாணவிகள் கல்வியில் முன்னேற்றம் காண வேண்டும் என்றால் கடமையாக பாடுபட வேண்டி வரும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு சில முன்னேற்பாடுகளை செய்து கொள்வது முக்கியம். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்கள் எந்த ஒரு புதிய வேலைகளையும் தவிர்ப்பது நல்லது.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான நீல நிற ஆடை அணிந்து எம்பெருமான் சிவபெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

author avatar
Selvarani