கும்பம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு நல்லவை நடைபெறும் நாள்!!

0
95
#image_title

கும்பம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு நல்லவை நடைபெறும் நாள்!!

கும்ப ராசி அன்பர்களே ராசி அதிபதி சனி பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு நல்லவை நடைபெறும் நாள். உங்கள் வாழ்க்கையில் சில விஷயங்கள் இதுபோன்று நடக்கலாம் என்று சிந்தித்து வைத்திருப்பீர்கள் அது இன்றைய தினம் நிறைவேறும். வருமானம் ஒரு அளவிற்கு திருப்திகரமாக வந்து சேரும். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் சலுகைகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரம் அருமையாக நடைபெறும்.

குடும்ப உறுப்பினர்கள் மகிழ்ச்சிகரமாக காணப்படுவார்கள். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் நூதனமாக செயல்படுவார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வீடு மனை வாங்கும் யோகம் உண்டாகும். உத்தியோகத்தில் உள்ள பெண்கள் சிறப்பாக செயல்படுவார்கள். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு மனம் மகிழும் விஷயங்கள் இல்லத்தில் நடைபெறும். உடல் ஆரோக்கியம் சீராகிஆனந்தமாக காணப்படுவார்கள்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் அபரிவிதமான வளர்ச்சி உண்டாகும். மூத்த வயதில் சேர்ந்த அன்பர்கள் மகிழ்ச்சிகரமாக காணப்படுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு நல்ல செய்தி ஒன்று வந்து சேரும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான மஞ்சள் நிற ஆடை அணிந்து குரு தட்சிணாமூர்த்தி சுவாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

author avatar
Selvarani