மகரம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மனதில் ஆன்மீக எண்ணங்கள் அதிகரிக்கும் நாள்!!

0
156
#image_title

மகரம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மனதில் ஆன்மீக எண்ணங்கள் அதிகரிக்கும் நாள்!!

மகர ராசி அன்பர்களே ராசி அதிபதி சனி பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு மனதில் ஆன்மீக எண்ணங்கள் அதிகரிக்கும் நாள். சிலருக்கு குலதெய்வ பிரார்த்தனைகளை நிவர்த்தி செய்து மகிழும் வாய்ப்புகள் உண்டாகும். குடும்ப உறவு மற்றும் கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக உள்ளது.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரும். உத்தியோகத்தில் வேலை பளு குறையும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக சில புதிய வாய்ப்புகள் வந்து சேரும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் பொறுமை காப்பார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் உறுதியாகும். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் ஒருவித குழப்பம் தோன்றும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் ஆன்மீக விஷயங்களில் நாட்டம் கொள்வார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு சில முக்கிய முன்னேற்பாடுகளை செய்வீர்கள்.

மாணவ மாணவிகள் கல்வியில் அற்புதமாக செயல்படுவார்கள். மூத்த வயதை சேர்ந்த நண்பர்கள் எந்த ஒரு விஷயத்திலும் எச்சரிக்கையுடன் செயல்படுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு சந்தோஷமான செய்தி வந்து சேரும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான பச்சை நிற ஆடை அணிந்து ஸ்ரீ மீனாட்சி அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

author avatar
Selvarani