மீனம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு தன்னம்பிக்கையோடு செயல்பட்டு வெற்றி காணும் நாள்!!

0
164
#image_title

மீனம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு தன்னம்பிக்கையோடு செயல்பட்டு வெற்றி காணும் நாள்!!

மீன ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு தன்னம்பிக்கையோடு செயல்பட்டு வெற்றி காணும் நாள். குடும்ப உறவு மற்றும் கணவன் மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக உள்ளது ஆகையால் சந்தோஷமாக இருப்பீர்கள்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரலாம். உத்தியோகத்தில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரம் அருமையாக நடைபெறும் அத்துடன் சிலர் அதிரடி திட்டங்களை அறிவித்து வெற்றி அடைவீர்கள். அரசியலில் இருக்கும் நண்பர்கள் மேடைப்பேச்சுகளில் ஜெயிப்பார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு துணிவுடன் செல்லும் வாய்ப்பு வந்து சேரும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் உடன்பிறப்புகள் மூலம் சில நன்மைகளை பெறுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் தைரியமான சூழ்நிலை உண்டாகும். மூத்த வயதை சேர்ந்த நண்பர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி சந்தோசமாக காணப்படுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு எந்த ஒரு முயற்சியும் வெற்றி பெறும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ரோஸ் நிற ஆடை அணிந்து சாரபரமேஸ்வரரை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

author avatar
Selvarani