மகரம் – இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு சந்தோஷ செய்தி வந்து சேரும் நாள்!!

0
127
Capricorn – Today's Horoscope!! An exciting day!
Capricorn – Today's Horoscope!! An exciting day!

மகரம் – இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு சந்தோஷ செய்தி வந்து சேரும் நாள்!!

மகர ராசி அன்பர்களே ராசி அதிபதி சனி பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு சந்தோஷமான செய்திகள் அதிகாலையிலே வந்து சேரும் நாள். கணவன் மனைவியுடைய ஒற்றுமை அதிகரிக்கும் நாள். வாழ்க்கைத் துணை உறவினர்கள் உங்களுக்கு ஆதரவு கரம் நீட்டுவார்கள்.

வருமானம் நீங்கள் எதிர் பார்த்தபடி வந்து சேர்வதால் பொருளாதாரம் முன்னேற்றமாக தெரியும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்க்கும் நன்மைகள் அருமையாக வந்து சேரும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக இருந்து வந்த இன்னல்கள் மறைந்து வியாபாரம் அருமையாக நடைபெறும். உடல் ஆரோக்கியம் சீரடையும்.

மாணவ மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். அரசியல்வாதிகள் கொண்டாட்டமாக காணப்படுவார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வருமான வாய்ப்புகள் உறுதியாவதால் சந்தோஷமான சூழ்நிலைகளை காண்பார்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஆதரவு அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கல் சிறப்பாக செல்லும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு எதிர்ப்பாராத நன்மை ஒன்று வந்து சேரும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு கணவன் விட்டாரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். மூத்த வயதில் சிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி கவனம் செலுத்துவார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சிவப்பு நிற ஆடை அணிந்து எம்பெருமான் முருகப்பெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.