மகரம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு சந்தோஷம் அதிகரிக்கும் நாள்!!

0
174
#image_title

மகரம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு சந்தோஷம் அதிகரிக்கும் நாள்!!

மகர ராசி அன்பர்களே ராசி அதிபதி சனி பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு சந்தோஷம் அதிகரிக்கும் நாள். குடும்ப உறவு மற்றும் கணவன் மனைவி இடையே அதி அற்புதமான அன்யூனியம் நிலவும்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரும். உத்தியோகத்தில் முன்னேற்றம் கூடி வரும். தொழில் மற்றும் வியாபாரம் லாபகரமாக செல்லும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் முக்கிய பிரபலங்களாக மாறுவார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரும்.

உத்தியோகம் செய்யும் பெண்களுக்கு மனதில் ஒரு குதூகலம் குடிகொள்ளும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் கணவனின் அன்பை பெற்று மகிழ்வதோடு மட்டுமல்லாமல் கணவன் வீட்டாரின் அன்பை பெற்று மகிழ்வார்கள். உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக காணப்படுவீர்கள்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் இருந்து வந்த தடை தாமதங்கள் விலகும். மூத்த வயதை சேர்ந்த அன்பர்கள் சந்தோஷமான சூழ்நிலைகளை காண்பார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு எந்த ஒரு முயற்சியும் வெற்றி அடையும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான பல வண்ண நிற ஆடை அணிந்து எம்பெருமான் விநாயகர் பெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

author avatar
Selvarani