மகரம் ராசி – இன்றைய ராசிபலன்!! மிகவும் மகிழ்ச்சி அளிக்கக்கூடிய நாள் 

0
227
Makaram - Guru Vakra Peyarchi Palan 2021 in Tamil Makara Rasi
Makaram - Guru Vakra Peyarchi Palan 2021 in Tamil Makara Rasi

மகரம் ராசி – இன்றைய ராசிபலன்!! மிகவும் மகிழ்ச்சி அளிக்கக்கூடிய நாள்

மகர ராசி அன்பர்களே ராசி அதிபதி சனி பகவான். இன்றைக்கு உங்கள் நாள் மிகவும் மகிழ்ச்சி அளிக்கக்கூடிய நாளாக உள்ளது. நீங்கள் மிகவும் கொடிக்கட்டி பறக்கக்கூடிய நாளாக உள்ளது.

கணவன் மனைவியிடையே நல்ல ஒற்றுமை இருப்பதால் வெளியிடங்களுக்கு சென்று மகிழ்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் மூலம் சில நன்மைகள் நடைபெறும். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் சலுகைகள் கண்டிப்பாக கிடைக்கும். தொழில் வியாபாரம் தொடர்பாக நீங்கள் கேட்டிருந்த கடன் முதல்கள் வந்து சேரும் வாய்ப்பு உள்ளது.

கொடுக்கல் வாங்கல் மிகவும் அருமையாக இருப்பதால் நீங்கள் புதிய பாதைகளை சென்று வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு சந்தோஷமான செய்தி வந்து சேரும். குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்கள் கணவன் அன்பை பெற்று மகிழ்வார்கள்.

நண்பர்கள் உறவினர்கள் மற்றும் உடன்பிறந்த சகோதர சகோதரிகள் மூலம் நன்மைகள் வந்து சேரும். அரசியல்வாதிகளுக்கு புதுமனை புது வீடு வாங்கி மகிழும் யோகம் உண்டாகும். கலைத்துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கு வருமான வாய்ப்பு அதிகரிக்கும். மூத்த வயது சிறுவர்கள் உடல் ஆரோக்கியத்தை சீராகி ஆனந்தம் அடைவார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சாம்பல் நிற ஆடையை அணிந்து ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமியை வணங்கி வாருங்கள் இன்று உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்

Previous articleபாத வெடிப்பால் அவதிப்படுகின்றீர்களா? உடனடியாக இதனை மட்டும் செய்து பாருங்கள்!
Next articleகுடியரசு தலைவர் குறித்து சர்ச்சை கருத்து.. திரிணாமுல் அமைச்சருக்கு எதிராக வெடித்த போராட்டம்.. மம்தா செய்த செயல்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here