கும்பம் – இன்றைய ராசிபலன்! உறவினர்களால் மனம் மகிழும் நாள்!
கும்ப ராசி அன்பர்களே ராசி அதிபதி சனி பகவான்.இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு உறவினர்களால் மனம் மகிழும் நாள். இன்றைக்கு அயன்ன சயன்ன ஸ்தானமாகிய விரைய ஸ்தானத்தில் சந்திர பகவான் உள்ளதால் உறவினர்கள் வீடு தேடி வருவதால் செலவுகள் வரும். இருந்தாலும் மனதில் சந்தோஷம் கிடைக்கும். நிதி அணுகலமாக இருந்தாலும் செலவுகளும் வந்து சேரும்.
கணவன் மனைவியிடையே அதி அற்புதமான புரிதல் உணர்வு மேம்படும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்.
உத்தியோகத்தில் பணியிட மாறுதல் சிலருக்கு உருவாகலாம். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக பயண வாய்ப்புகள் மேம்படும். கொடுக்கல் வாங்கலில் கவனம் வேண்டும்.
உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு எடுக்கும் முயற்சிகள் சற்று அருமையாக நிறைவேறி மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்கள் விருந்து மட்டும் கேளிக்கைகளில் கலந்து கொண்டு மகிழ்வார்கள்.
நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகளின் மூலம் சில செலவுகள் உண்டாகலாம். அரசியல்வாதிகள் பயணங்கள் மேற்கொள்வார்கள். கலைத்துறை சேர்ந்த அன்பர்கள் வெளியூர் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்வார்கள். மூத்த வயது சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியத்திற்காக சிறு மருத்துவச் செலவை மேற்கொள்வார்கள்.
இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ஊதா நிற ஆடை அணிந்து ஸ்ரீதேவி கருமாரி அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் இன்றைக்கு அதி அற்புதமான நாளாக உங்களுக்கு அமையும்.