கேப்டன் மில்லர் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!!நடிகர் தனுஷ் பதிவிட்ட டுவீட்!!

0
213
Captain Miller Movie First Look!!Actor Dhanush's tweet!!
Captain Miller Movie First Look!!Actor Dhanush's tweet!!
கேப்டன் மில்லர் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!!நடிகர் தனுஷ் பதிவிட்ட டுவீட்!!
நடிகர் தனுஷ் அவர்கள் நடித்து வரும் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பற்றி நடிகர் தனுஷ் அவர்கள் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
வாத்தி திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் தனுஷ் அவர்கள் தற்பொழுது கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். நடிகர் தனுஷ் நடித்து வரும் கேப்டன் மில்லர் திரைப்படத்தை இயக்குநர் அருண் மாதேஷ்வரன் இயக்கி வருகிறார்.
கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடிகை பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்கிறார். பிரபல தெலுங்கு நடிகர் சிவராஜ் குமார், நடிகர் சந்தீப் கிஷன், நடிகை நிவேதிதா சதீஷ், ஆங்கிலேய நடிகர் எட்வர்ட் சொன்னென்பிலிக், நடிகர் ஜான் கொக்கேன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
நடிகர் தனுஷ் நடிக்கும் 47வது படமான கேப்டன் மில்லர் திரைப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக தியாகராஜன் அவர்கள் தயாரிக்கிறார். கேப்டன் மில்லர் திரைப்படத்திற்கு ஜிவி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
இந்நிலையில் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ்  நிறுவனமும் நடிகர் தனுஷ் அவர்களும் டுவிட்டர் பக்கத்தில் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் பற்றி பதிவிட்டுள்ளனர்.
நடிகர் தனுஷ் அவர்கள் அவருடைய டுவிட்டர் பக்கத்தில் கேப்டன் மில்லர் ஃபர்ஸ்ட்லுக் லோடிங் என்று ஒரு சின்னத்துடன் பதிவிட்டார். இந்த டுவீட் பதிவு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை அதிகரித்தது. அடுத்து சிறிது நேரத்தில் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது.
தயாரிப்பு நிறுவனம் சத்யஜோதி பிலிம்ஸ்  பதிவிட்டுள்ள அந்த டுவிட்டர் பதிவில் கேப்டன் மில்லர் ஃபர்ஸ்ட்லுக் என்று ஹேஸ்டேக் பதிவிட்டு ஜூன் 30 என்று பதிவிட்டுள்ளது. அதன்படி கேப்டன் மில்லர் திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் ஜூன் 30ம் தெதி வெளியாகவுள்ளது.
Previous articleபயணிகளுக்கு ஹேப்பி நியூஸ் 156 சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு  தொடக்கம் !! மத்திய அரசின் மகத்தான அறிவிப்பு !! 
Next articleநடிகர் விஜய் மீது புகார் மனு!! நான் ரெடி பாட்டுக்கு எதிராக குற்றச்சாட்டு!!