ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்தாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டி… முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 283 ரன்களுக்கு ஆல் அவுட்…!

0
73

 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்தாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டி… முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 283 ரன்களுக்கு ஆல் அவுட்…

 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5வது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 283 ரன்கள் குவித்துள்ளது.

 

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் 5வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று அதாவது ஜூலை 27ம் தேதி தொடங்கியது. 5வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

 

இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 283 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஹேரி ப்ரூக் அரைசதம் அடித்து 85 ரன்கள் எடுத்தார். தொடக்க வீரர் டக்கெட் 41 ரன்களும், மற்றொரு தொடக்க வீரர் ஜேக் க்ராவ்லி 22 ரன்களும் சேர்த்தனர். மொயீன் அலி 34 ரன்கள் சேர்த்தார். கிறிஸ் வோக்ஸ் 36 ரன்களும், மார்க் வுட் 28 ரன்களும் சேர்த்தனர்.

 

முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணியில் பந்து வீச்சில் சிறப்பாக பந்துவீசி மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஹசல்வுட், டி மர்பி தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர். மிட்செல் மார்ஷ், பேட் கம்மின்ஸ் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

 

இதையடுத்து 283 ரன்கள் பின் தங்கிய நிலையில் முதல் இன்னிங்ஸை ஆஸ்திரேலிய அணி தொடங்கியது. ஆஸ்திரேலிய அணி முதல் நாள் முடிவில் முதல் இன்னிங்ஸில் ஒரு விக்கெட்டை இழந்து 61 ரன்கள் சேர்த்துள்ளது.

 

முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணியில் தொடக்க வீரர் தொடக்க வீரர் டேவிட் வார்னர் 24 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் உஸ்மான் க்வாஜா 26 ரன்களும், மார்னஷ் லபச்சானே 2 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலிய அணியின் ஒரு விக்கெட்டை கிறிஸ் வோக்ஸ் கைப்பற்றினார்.