கேப்டன் விஜயகாந்த் நடிகர் என்ற போதிலும், ‘மிகச் சிறந்த மனிதர்’ என்றே அவரை அடையாளப்படுத்தலாம். அந்த அளவு ‘மனித குணம்’ உடையவர். தான் நடிக்கும் படத்தில், ‘செட்டில் வேலை செய்பவர் அனைவரையும் சாப்பிட்டீர்களா? சாப்பிட்டு வேலை செய்யுங்கள்’ என்று சொல்லிக்கொண்டே இருப்பாராம்.
பெரிய பெரிய நடிகர்களின் நூறாவது படம் கூட தோல்வியுற்றுள்ளது. இவருக்கோ, நூறாவது படமாக அமைந்த ‘கேப்டன் பிரபாகரன்’ படம் ‘கேப்டன் என்று அடைமொழியை எடுத்துக் கூறும் வகையில் அமைந்தது’. இந்த படம் ஆனது ‘விஜயகாந்த் ரசிகர்கள் மட்டுமல்லாமல் மற்ற ரசிகர்களைன்னயும் கவரும் வகையில் அமைந்தது’.
மேலும் இப்படத்தில் வந்த பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றது. அதிலும் குறிப்பாக “ஆட்டமா தேரோட்டமா பாடலும், பாசமுள்ள பாண்டியரே” என்ற பாடலும் மிகப்பெரிய ஹிட் ஆனது. இன்றைய பொழுதிலும், இந்தப் பாடல்களுக்கு ரசிகர்கள் உண்டு. இந்தப் பாடல் வரிகள் ‘விஜயகாந்த் படத்துக்காக எழுதப்பட்டதா? என்றால் இல்லை என்பதே உண்மை’. இந்தப் பாடல் ஆனது, ‘இளையராஜா இசையில் கங்கை அமரன் எழுதிய கவிதையாகும்’. இந்த படத்தில் ‘விஜயகாந்த் ஹீரோ எனினும், இந்தப் பாடல்களில் அவ்வப்போது தான் வந்து செல்வார்’. அந்த காலத்தில் கங்கை அமரன் பாடல்கள் என்றாலே அவரது அண்ணன் பாவலரைப் பற்றி ஒரு இடத்தில் ஆவது பாடி இருப்பார். விஜயகாந்த் மதுரைக்காரர் என்பவரால் இந்தப் பாடலில் ‘பாசமுள்ள பாண்டியரே, பாட்டு கட்டும் பாவலரே’ என்ற வரி இவருக்கு பொருத்தமாகவே அமைந்தது.