கேப்டன் மில்லரில் தனுஷுக்கு எத்தனை வேடம்… இயக்குனர் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்கள்!

0
238

கேப்டன் மில்லரில் தனுஷுக்கு எத்தனை வேடம்… இயக்குனர் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்கள்!

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்துக்கு கேப்டன் மில்லர் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இந்திய சினிமா அளவில் பிரபலமான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் தனுஷ். அவர், நடிகராக மட்டுமல்லாமல் பாடகர், இயக்குனர், தயாரிப்பாளர், கதாசிரியர், பாடலாசிரியர் என பன்முகத் திறன் கொண்டவராக வலம் வருகிறார். கோலிவுட், பாலிவுட் என கலக்கி வரும் தனுஷ் தற்போது வாத்தி படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகிற்கு அறிமுகம் ஆகியுள்ளார்.

ஹாலிவுட்டில் உருவாகும் தி கிரே மேன் படத்திலும் நடித்துள்ளார் தனுஷ். இந்த திரைப்படம் விரைவில் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளது. இந்நிலையில் பல மொழிகளில் பல படங்களில் நடித்து வரும் தனுஷ் அடுத்து ராக்கி மற்றும் சாணிக்காயிதம் ஆகிய படங்களின் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்துக்கு கேப்டன் மில்லர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. வரலாற்று பின்னணியில் உருவாகும் இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் இந்த படம் பற்றிய அறிவிப்பு மற்றும் மோஷன் போஸ்டர் ஆகியவை வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்க, மதன் கார்க்கி வசனங்களை எழுதுகிறார். ஒளிப்பதிவாளராக ஸ்ரேயாஸ் கிருஷ்ணா பணியாற்றுகிறார்.

படம் பற்றி பேசியுள்ள இயக்குனர் அருண் மாதேஸ்வரன் படத்தில் தனுஷ் கேப்டன் மில்லர் என்ற கதாபாத்திரத்திலும், மேலும் இரண்டு கதாபாத்திரங்களிலும் நடிக்கிறார். மாஸ் ஆடியன்ஸைக் கவரும் ஆக்‌ஷன் படமாக இந்த படம் இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

கேப்டன் மில்லரில் தனுஷுக்கு எத்தனை வேடம்… இயக்குனர் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்கள்!

 

 

Previous articleவணிகவளாகத்தில் திடீரென துப்பாக்கிச்சூடு! பலர் படுகாயம்!
Next articleகிடுகிடுவென பனிப்பாறைகள் சரிந்தது! இதில் சிக்கிக் கொண்ட ஆறு பேர் பரிதாபமாக உயிரிழப்பு! மேலும் சிலபேரை ஹெலிகாப்டர்  மூலம் தேடும் பணியில் ஈடுபட்டு  வருகின்றார்கள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here